காயல்பட்டினத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகரின் கிழக்குப் பகுதியில் சுமார் 13 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் கயிற்று வாளி உதவியின்றி, கையாலேயே வாளியை விட்டுத் தண்ணீர் எடுக்கும் அளவில் நிறைந்துவிட்டன.
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர்த்தொட்டிகளும் மழை நீரால் நிறைந்து, கிணற்று நீருடன் கலந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் வீடுகளிலுள்ள கழிப்பறைத் தொட்டிகள் மழை நீரால் நிரப்பப்பட்டுவிட்டதால், அங்குள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
குருவித்துறைப் பள்ளிவாசல் உள்ளிட்ட கிழக்குப் பகுதி பள்ளிவாசல்களில் மையவாடி முழுக்கவும் மழை நீர் தேங்கிப் பெருங்குளமாகக் காட்சியளிக்கிறது. இத்தருணத்தில் மரணம் எதுவும் நிகழுமானால், அவர்களை நல்லடக்கம் செய்ய இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
படங்களில் உதவி:
நோனா அபூஹுரைரா |