காயல்பட்டினத்தில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் மைதா மாவுப் பசை கொண்டு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் நனைந்து, நீரை நன்கு உறிஞ்சிய நிலையில் உள்ளன.
மழை நீர்த்தேக்கம் காரணமாக மேய்ச்சலுக்கு வழியற்றுள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இந்தச் சுவரொட்டிகளைத் தற்போது உணவாக உட்கொண்டு வருகின்றன.
இக்காட்சியைக் காண்கையில், “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று சொல்லப்படுவதைப் போல, “கால்நடைகளுக்குக் காணுமிடமெல்லாம் உணவு” என்றும் சொல்லத் தோன்றுகிறது.
|