காயல்பட்டினம் - சுற்றுவட்டாரப் பொதுமக்களின் நலனுக்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் – மருத்துவ வாகனச் சேவையைப் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறது.
புதிய ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு & சமூக நல்லிணக்க நிகழ்ச்சி, 29.11.2019. வெள்ளிக்கிழமையன்று, 19.00 மணியளவில் – காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. அதில், தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை அர்ப்பணித்து, வாழ்த்துரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், தமுமுக நிர்வாகிகள், அங்கத்தினர், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
‘ஸ்கட்’ அபூ
|