காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) செயற்குழு உறுப்பினர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் உடைய சிறிய தந்தை, பாக்கர் காலனியைச் சேர்ந்த செல் எம்.ஐ.முஹம்மத் இஸ்மாஈல், 21.11.2019. வியாழக்கிழமையன்று 10.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் செல் முஹம்மத் இப்றாஹீம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் எம்.எஸ்.எம்.காதிர் ஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் செல் ஐ.மூஸா, செல் அஹ்மத் காஸிம் ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் நெய்னா முஹம்மத், மர்ஹூம் ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத், முத்து அபூபக்கர், காஜா கமால், சி.எஸ்.முஹம்மத் ஜாஹிர், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மச்சானும்,
இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலாளர் பி.எம்.ரஃபீக் உடைய சகலையும்,
எம்.என்.அபூபக்கர், ‘மெகா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் ஆகியோரின் சிறிய தந்தையும்,
எஃப்.எஸ்.அப்துல் ஹமீத் என்பவரது மாமனாரும்,
எச்.எம்.சாமு ஷிஹாபுத்தீன், எச்.எம்.அப்துல் அஜீஸ், அஹ்மத் காஸிம், முத்து அபூபக்கர், அஹ்மத் முஹ்யித்தீன், முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மாமாவும்,
ஏ.எச்.முஹம்மத் ஸாலிஹ் என்பவரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, அன்று 20.00 மணியளவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த செல் எம்.ஐ.முஹம்மத் இஸ்மாஈல், சென்னை மண்ணடியிலுள்ள மஸ்ஜிதுல் மஃமூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பள்ளிவாசல்களில் முஅத்தினாகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படம்:
‘ஸ்கட்’ அபூ
|