காயல்பட்டினத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகர் முழுக்க மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு, நகரின் பொதுநல அமைப்புகள் பல வடிவங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் நகரில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, பகுதி வாரியாக நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பொதுநல அமைப்புகளாலும், சமூக ஆர்வலர்களாலும் நகரில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில், ஐக்கியப் பேரவை சார்பில் - 08.12.2019. ஞாயிற்றுக்கிழமையன்று 20.30 மணியளவில், நன்றியறிவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், அழைப்பையேற்று கலந்துகொண்ட சேவையாளர்களுக்கு ஐக்கியப் பேரவை சார்பில் அதன் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர் |