காயல்பட்டினம் அஞ்சல் நிலையத்தில் பழுதடைந்த நிலையிலுள்ள ஜெனரேட்டரை சரிசெய்வதற்கான செலவு மதிப்பீடு ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதாக – மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகாவிற்கு, தூத்துக்குடி மண்டல அஞ்சல் நிலையங்களின் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் தபால் நிலையத்தில் உள்ள GENERATOR பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் - மாதாந்திர பராமரிப்பு தினங்களில், இதர மின்வெட்டு நேரங்களில் - தபால் நிலைய பணிகள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்களும் அவதி அடைகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு - சில தினங்களுக்கு முன்பு, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அனைவரிடமும் - GENERATOR யை சீர் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - GENERATOR யை தயாரித்த KIRLOSKAR நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு செய்து, பெரிய அளவில் பழுதடைந்துள்ளது என்றும், அதனை சரி செய்ய மதிப்பீடு வழங்கியிருப்பதாகவும் - விரைவில் GENERATOR சரி செய்யப்படும் என்றும் - தூத்துக்குடி மண்டல தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் - மெகா அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|