காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்புடன் (மெகா) சார்பில், நடத்தப்பட்ட – நகராட்சிகள் குறித்த இணையவழித் தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? குழுமம் மூலம் - [LEARN] நகராட்சிகள் என்ற சிறப்பு குழுமம் மூலமும், நடப்பது என்ன? குழுமத்தின் ஏனைய சமூக ஊடகக்குழுமங்கள் மூலம் - 11 பாகங்களாக - உள்ளாட்சி அமைப்புகள் குறித்து சில தகவல்கள் வழங்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் - 20 கேள்விகள் அடங்கிய - தேர்வு படிவம் வெளியிடப்பட்டது மேலும் - குறைந்தது 75 மதிப்பெண்கள் பெறும் பங்கேற்பாளர்களுக்கு - சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பதில்கள் பெற இறுதி தினமான நவம்பர் 23 வரை பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் 75 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் - 28 பேர்கள் பெற்றார்கள். நேற்று (நவம்பர் 27) மாலை 5 மணியளவில், ஹாஜியப்பா பள்ளி எதிரில் உள்ள துஃபைல் வணிக வளாகம், முதல் மாடியில் உள்ள, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மெகா அமைப்பின் தலைவர் ஹாஜி S.A.முஹைதீன் அவர்கள் தலைமையில் நடந்த இந்த எளிய நிகழ்ச்சியில் - நிர்வாகிகளும், பரிசு பெற்றவர்களும் கலந்துக்கொண்டார்கள்.
பதில்கள் பெற இறுதி தினமான நவம்பர் 23 வரை பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் 75 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பங்கேற்பாளர்கள் பெயர் கீழே.
(1) ம.மெய்தீன் அப்துல் காதர்
(2) முஃபிதா அப்துல் காதர்
(3) சதக்கு ஜாபிர்
(4) நாஜ்லீன்
(5) முகம்மது ஆயிஷா
(6) முகம்மது காசிம் எம். டி.
(7) அப் ராஸ் மரைக்கார்
(8) S.D. சதக்கத்துல்லாஹ்
(9) M.A.C. சாஹிப் தம்பி ரிஃபாயி
(10) முஹம்மத் அப்துல் காதர்
(11) M.H.L.புஹாரி ரமலான்
(12) M.A.K.J. ஆமினா உம்மாள்
(13) M.M. கதீஜா பீவி
(14) T.A. உம்மு அய்மன்
(15) M A C காதர் ஹசீனா
(16) முஹம்மத் இர்ஷாத்
(17) கரீமுல்லா
(18) K.M.மொகுதூம் பீவி
(19) K.M. உம்மு ஹபீபா
(20) அயாஸ்
(21) அஹமது பாதுஷா (ஏர்டெல் பாஷா)
(22) காயல் இறையருள் யூசுப் சாகிபு
(23) A.L.B. ஹனிதா
(24) M.N.ஆஷிகா ஷபானா
(25) ரைசா
(26) அபூபக்கர்
(27) B.சேக் அப்துல் காதர்
(28) அக்பர்ஷா
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|