காயல்பட்டினம் உட்பட – தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் – அதன் சமூக ஊடகக் குழுமமான “நடப்பது என்ன?” குழுமம் மூலம் “NE ஒருங்கிணைந்த நிவாரணம்” எனும் தலைப்பில் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொதுநல அமைப்பினர், தன்னார்வலர்களை இணைத்து, அனைவரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
04.12.2019. புதன்கிழமையன்று “நடப்பது என்ன?” நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் இணைந்து காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளைப் பகிர்ந்தனர். இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
கனமழை காரணமாக – காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் – குறிப்பாக தாழ்வான பகுதிகளில் – மழை நீர் தேங்கி, பொது மக்கள் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
நடப்பது என்ன? ஒருங்கிணைந்த நிவாரணம் குழுமம் சார்பாக, கன மழையினால் பாதிப்புக்குள்ளான நகரின் தாழ்வான பகுதிகளில் ஒன்றான உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு பகுதியில் – இன்று (4.12.2019) மதியம் உணவு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|