நிகழும் மழைக்காலத்தில் பொதுமக்களை நோய்கள் தாக்காது தடுப்பதற்காக, மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்திடுமாறு - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கோரியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
கடந்த சில வாரங்களாக நகரில் பெய்து வரும் மழையின் காரணமாக - நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி - கொசுக்கள் உட்பட பல்வேறு இன்னல்களை பொது மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
நகரின் பிரதான மருத்துவமனைகளில் - காய்ச்சல் உட்பட பல்வேறு காரணமாக - பலர் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
தற்போதைய நிலை காரணமாகவும், மழை நின்றபிறகும் நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது என்பதனை கருத்தில் கொண்டும் - தமிழக அரசின் சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் அவர்களிடம், நகரின் அனைத்து பகுதி மக்களும் பயனடையும் வகையில் - சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும்படி - இன்று, தூத்துக்குடியில், நேரடியாக - மெகா அமைப்பு சார்பாக - கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|