காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் புதிய சாலை அமைப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விஷமத்தனமாக தவறான தகவலை காயல்பட்டினம் நகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியும், நடந்தது என்ன என்பதை விளக்கியும் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
MEGA குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுக்கான விளக்கம்!
சொளுக்கார் தெரு சாலை குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் பொது தகவல் அலுவலர் திரு ரவிச்சந்திரனின் விஷமத்தனமான தகவல்!
ஜூலை மாதம் -பொறுப்பேற்ற காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் (பொ) திருமதி புஷ்பலதா - மஃதூம் தெரு மற்றும் சொளுக்கார் தெரு சாலைகளை மட்டும் தார் சாலைகளாக மாற்றிட - 9.8.2019 அன்று - தீர்மானம் (#1869) நிறைவேற்றினார். பார்க்கவும் இணைப்பு.
அதனை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) திரு பாஸ்கரன் IAS, தார் சாலையாக மாற்றிட சில விபரங்களை அனுப்பிட கோரி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு 23.10.2019 அன்று கடிதம் அனுப்பினார். பார்க்கவும் இணைப்பு.
அதற்கு ஒரு வாரகாலம் கழித்து - 30.10.2019 அன்று, மஃதூம் தெரு மற்றும் சொளுக்கார் தெரு சாலைகளை - முறையாக, தார் சாலையாக மாற்ற நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை (#1869) விரைவில் அமல்படுத்த கோரி - மஃதூம் தெருவை சார்ந்த ஏ.எஸ்.புஹாரி மற்றும் சொளுக்கார் தெருவை சார்ந்த எம்.ஏ.அப்துல் பாசித் ஆகியோர் - வழக்கறிஞர் மூலம் நோடீஸ் அனுப்பினார்கள்.
அந்த நோடீஸில் உள்ள வாசகம் கீழே.
"... therefore, I am duly instructed by my clients to call upon all of the above of you to implement the Resolution passed for laying Tar raod and fulfill the wish of the people of those areas..."
உண்மை இவ்வாறிருக்க, இன்று சமூக ஊடகங்கள் வாயிலாக - சொளுக்கார் தெரு சாலைக்கு தடை வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தெருவிற்கு சம்பந்தம் இல்லாத ஏ.எஸ்.புஹாரி என்பவர் இதில் தலையிட்டிருப்பதாகவும் - அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
இது உண்மை அல்ல.
சொளுக்கார் தெரு சார்ந்த எம்.ஏ.அப்துல் பாசித் மற்றும் மஃதூம் தெரு சார்ந்த ஏ.எஸ்.புஹாரி ஆகியோர் - அவர்கள் இருவரும் சார்ந்த தெருக்கள் குறித்து - காயல்பட்டினம் நகராட்சி நிறைவேற்றிய ஒரே தீர்மானத்தை, விரைவில் அமல்படுத்த கோரியே வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பியுள்ளனர். பார்க்கவும் இணைக்கப்பட்டுள்ள வழிக்கறிஞர் நோடீஸ் நகல்.
இது சம்பந்தமாக - காயல்பட்டினம் நகராட்சி வழங்கியுள்ள, தவறான பதில் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
YUF சங்கம் பெயரில் 29.11.2019 அன்று வினவப்பட்ட 4 தகவல்களில் இரண்டாவது தகவல் கீழ்கண்டது.
சாலைகள் போடுவதற்கான தடுப்பாணை ஏதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு -
நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லாத காரணத்தால், வழக்குகள் இல்லை என தகவல் வழங்கவேண்டிய பொது தகவல் அலுவலர், விஷமத்தனமாக - கீழ்க்காணும் பதிலை வழங்கியுள்ளார்.
சொளுக்கார் தெரு சாலை தொடர்பாக திரு ஏ.எஸ்.புஹாரி த/பெ அஹமது சலாவுதீன், மொகுதூம் தெரு என்பவரால் வக்கீல் நோடீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
இது தவறான பதில் மட்டுமல்ல; விஷமத்தனத்துடன் - வழங்கப்பட்டுள்ள பதில்.
(1) கேட்கப்பட்ட கேள்வி - தெருக்களுக்கு நீதிமன்றம் மூலம் தடுப்பாணை ஏதும் உள்ளதா என்பதாகும். அதற்கு பதில் - இல்லை என்றே வழங்கியிருக்கவேண்டும். ஏன் எனில் நீதிமன்றத்தில் எந்த தடையும் இல்லை.
(2) பதிலில் - சொளுக்கார் தெருவை குறிப்பிட்டு - மஃதூம் தெருவை சார்ந்த ஏ.எஸ்.புஹாரி - வக்கீல் நோடீஸ் அனுப்பியுள்ளதாக பொது தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டே - வழங்கப்பட்டுள்ள பாதி தகவலாகும்.
30.10.2019 அன்று அனுப்பப்பட்ட நோடீஸ் - மஃதூம் தெரு வாசியான ஏ.எஸ்.புஹாரி மற்றும் சொளுக்கார் தெரு வாசியான அப்துல் பாசித் ஆகிய இருவர் பெயரில், அவர்கள் சார்ந்த தெருக்கள் குறித்து அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் - காயல்பட்டினம் நகராட்சியின் பொது தகவல் அலுவலர், இருவர் பெயரில், இரு வெவ்வேறு தெருக்கள் குறித்து வழங்கப்பட்ட நோடீஸ் என்ற உண்மையை மறைத்து, ஏ.எஸ்.புஹாரி என்பவர் சம்பந்தமில்லாத சொளுக்கார் தெரு குறித்து நோடீஸ் அனுப்பியுள்ளார் என்ற பதிலை வழங்கியுள்ளார்.
(3) தடையாணை உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என உண்மையான பதில் கூறாத பொது தகவல் அலுவலர், வெறும் வக்கீல் நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மட்டும் - தானாகவே முன்வந்து பதில் சொல்லியுள்ளார். அவ்வாறு - சம்பந்தமில்லாத பதில் சொன்ன பொது தகவல் அலுவலர், அந்த வக்கீல் நோடீஸ் எதற்காக கொடுக்கப்பட்டது என்ற உண்மையையும் மறைத்துள்ளார்.
அந்த வக்கீல் நோடீஸில் - காயல்பட்டினம் நகராட்சி - 9.8.2019 அன்று நிறைவேற்றிய - மஃதூம் தெரு மற்றும் சொளுக்கார் தெரு ஆகியவற்றை தார் சாலைகளாக அமைத்திடவேண்டும் என்ற தீர்மானத்தை விரைவில் அமல்படுத்திட கோரிய நோடீஸ் ஆகும்.
இந்த உண்மை மறைக்கப்பட்டு - விஷமத்தனமான பதிலை காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலர் திரு சி.ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார்.
அந்த பொய்யான தகவலை அடிப்படையாக கொண்டு - மக்களின் விருப்பப்படி, தார் சாலை போடப்பட்டால், தங்களுக்கு தோல்வி என கடந்த பல மாதங்களாக தடைகள் ஏற்படுத்திவரும் ஒரு சிலர், பொய்யான பிரச்சாரத்தை நகரில் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |