காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலர் என்.எஸ்.இ.மஹ்மூது உடைய மாமியார் – தீவுத்தெருவைச் சேர்ந்த டீ.எம்.கே.ஆமினா பீவி, இன்று 12.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,
மர்ஹூம் முஹம்மத் அவர்களின் மகளும்,
மர்ஹூம் ஷெய்க் அப்துல் காதிர் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.இ.அஹ்மத் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் ஹாஃபிழ் எம்.கே.செய்யித் அஹ்மத், மர்ஹூம் எம்.கே.செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் ஹாஃபிழ் எம்.கே.பாக்கிர் ஸாஹிப் ஆலிம், மர்ஹூம் எம்.கே.அஹ்மத் லெப்பை ஆகியோரின் சகோதரியும்,
கே.ஏ.எஸ்.கலீலுர்ரஹ்மான், ‘நேஷனல்’ காஜா ஆகியோரின் தாயாரும்,
இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, எம்.என்.எல்.சுலைமான் லெப்பை, அம்பலம் முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (11.12.2019. புதன்கிழமை) 09.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் N.M.அஹ்மத் ரிழ்வான்
|