மழைக்காலங்களில் காயல்பட்டினத்தில் மழை நீர் அதிகளவில் தேங்கும் பிரச்சினையை முற்றிலுமாகத் தவிர்த்திட நிரந்தரத் தீர்வு காணுமாறு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நெஞ்சார்ந்த நன்றியும் - முக்கிய முறையீடும்......
அன்பின் மக்களுக்கு , அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நமதூர் மழைநீர் வெள்ள நிவாரண பணிக்காக நம் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை கடந்த வாரம் நிவாரணத் தொண்டு ஆர்வமுள்ள சகோதரர்களை நான்கு குழுவினர்களாக பிரித்து, நான்கு திசைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அந்த குழுவும் அவர்களுடைய பணியை செவ்வனே செய்தார்கள்! அதன் தொடர்ச்சி இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது சில பகுதிகளில்!.
தன்னலம் பாராமல் இப்புண்ணிய பணியாற்றிய அத்துனை ஆர்வலர்களையும் ஐக்கியபேரவை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து தங்களுடைய நன்றியறிதலை சமர்ப்பிபித்து கவுரவித்தார்கள்!
இப்பணிகள் நடந்தேறுவதற்கு நகராட்சியை பொறுத்தவரை ஒருசில நேரங்களில் அவர்களிடமிருந்து உதவிகள்வர தாமதப்பட்டாலும், பெரும்பாலும் நம் ஐக்கியபேரவைக்கு, முழு ஒத்துழைப்பையும், முழு ஆதரவையும் முழு மரியாதையையும் கொடுத்ததின் காரணத்தினால் அவர்களுக்கு ஐக்கிய பேரவை தன் நன்றியருதலை தெரிவிக்கும் முகமாக நகராட்சிக்கே நேரில் சென்று ஆணையரையும், மற்றும் பல அதிகாரிகளையும் 09/12/2019 அன்று காலை 11 மணியளவில் சந்தித்து தங்கள் இதயப்பூர்வமான நன்றியினை சமர்பித்தார்கள்!
அடுத்து, தற்காலிகமாக நமதூருக்கு மாற்றலாகி வந்துள்ள சுகாதார ஆய்வாளரும், நம்மண்ணின் மைந்தருமான ஜனாப் காஜா நஜ்முத்தீன் SI அவர்களை போர்வை சூடி மனமுவந்து வரவேற்றார்கள்!
அடுத்து, நமதூருக்கு ஒவ்வொரு தடவையும் சற்று அதிகமாக மழை வரும் காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழும்பொழுது, நம் மக்கள் நீங்கனா இன்னல்களுக்கு உள்ளாவது ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கொரு நிரந்திர தீர்வு கிடைக்காதா என்கின்ற ஏக்கமிகு எதிர்பார்ப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது!
இதற்கு ஒரு நிரந்திர தீர்வு காணவேண்டும் அதற்குறிய உள் கட்டமைப்புடன் ஒரு திட்டத்தை வடிவமைத்து செய்வதற்கு நகராட்சி முழு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய பேரவை ஒரு வேண்டுகோள் விண்ணப்பமனுவை ஆணையரிடம் அளித்துள்ளார்கள்!
இறைவன் நம் முயற்சிகளை வெற்றியாக்கித்தருவானாக ஆமின்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
|