வழக்குரைஞராகும் செயற்குழு உறுப்பினருக்கு காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்புடன் (மெகா) வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமத்தின் மூத்த உறுப்பினரும், மாநிலத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் - பல்வேறு பொறுப்புகளில் இருந்து நீண்ட காலமாக சமூக பணியாற்றி வருபவருமான சகோதரர் M.N.அஹமது சாஹிப் - நேற்று (26-11-2019), சென்னையில் உள்ள BAR COUNCIL OF TAMIL NADU AND PUDUCHERRY அமைப்பில் பதிவு செய்து, தனது வழக்கறிஞர் சேவையை துவங்கியுள்ளார். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அன்னாரின் சேவைகள் - சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும், பயனுள்ளதாக அமைந்திட இறைவனிடம் பிரார்த்தனை செய்து, மெகா அமைப்பு | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழும உறுப்பினர்களின் - மனமார்ந்த வாழ்த்துக்களை சகோதரர் M.N. அஹமது சாஹிப் அவர்களுக்கு உரிதாக்கிக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|