காயல்பட்டினத்தில் மத நல்லிணக்கச் செயல்பாடுகளை இன்னும் வளர்க்கும் நோக்கில், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) சார்பில் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
1992 ஆம் ஆண்டு முதல் - மத்திய அரசு, நவம்பர் 19 முதல் 25 வரை - ஒவ்வொரு ஆண்டும் - மத நல்லிணக்க வாரமாக (COMMUNAL HARMONY CAMPAIGN WEEK) கடைபிடித்து வருகிறது.
இதன் நோக்கம் -
// கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி திரட்டுவது மற்றும்
// சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது.
இந்த வாரத்தின் இறுதி வேலை நாள் - கொடி நாளாக (FLAG DAY) - கடைபிடிக்கப்படும்.
இவ்வாண்டு, இந்த வாரத்தை முன்னிட்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம், சிறப்பு கட்டுரை போட்டி நடத்தவுள்ளது.
தலைப்பு மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு காயல்பட்டினம்
சொற்கள் 500 க்கு மிகாமல்; வயது வரம்பு கிடையாது
சிறந்த கட்டுரை சமர்ப்பிக்கும் - காயல்பட்டினம் சார்ந்த, ஹிந்து, முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ சமுதாயத்தினருக்கு - தலா ஒரு முதல் பரிசு ரொக்கம். மேலும் - 9 ஆறுதல் பரிசுகள்.
இறுதி தினம் நவம்பர் 29, 2019
ஆக்கங்களை தபால் மூலம் அனுப்பவேண்டிய முகவரி:
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா),
2 சி தைக்கா தெரு,
பேருந்து நிலையம் எதிரில்,
காயல்பட்டினம்.
நேரில் கொடுக்கவேண்டிய முகவரிகள்:
பதுரியா ஹோட்டல்,
எல்.கே.லெப்பை தம்பி சாலை.
ஸ்டார் ரெடிமேட்,
தபால் நிலையம் எதிரில்,
மெயின் ரோடு.
UNITED CARDS & PRINTS,
IOB வங்கி அருகில்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|