Deputation அடிப்படையில் வெளி மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை அனுப்புவதால், காயல்பட்டினம் மருத்துவமனையின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவ்வாறு அனுப்புவதை நிறுத்துமாறு, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) சார்பில் – தமிழக அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘மெகா’ சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - Non-Taluk மருத்துவமனை ஆகும்.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அரசாணை மூலம் - மருத்துவமனையின் மருத்துவர்கள் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. அந்த அரசாணை மூலம் - கூடுதல் இரண்டு இடங்கள், கண் மருத்துவர் என்பதற்கும், DGO என்பதற்கும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது 6 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அதில் 5 மருத்துவர்கள் - கண் மருத்துவர் உட்பட - MBBS மருத்துவர்கள். ஒருவர் - MD (GENERAL MEDICINE) மருத்துவர். DGO இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.
ஆறு மருத்துவர்கள் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக தாளில் தான் உள்ளது; நடைமுறையில் இல்லை.
கண் நிபுணராக நியமனம் செய்யப்பட டாக்டர் வில்ஃபர் - கடந்த சில மாதங்களாக, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்போது கண் மருத்துவமனை சேவைகிடையாது.
இது தவிர - எஞ்சியுள்ள 5 மருத்துவர்களில் - 2 - 3 மருத்துவர்கள், DEPUTATION என்ற பெயரில் பிற அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 400 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவமனையை பயன்படுத்துகிறார்கள். இரண்டு மருத்துவர் மட்டுமே OP பார்ப்பதால் - ஒரு நோயாளி மருத்துவர் பார்க்க - இரண்டு மணி நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.
மேலும் - அரசாணைப்படி - மருத்துவமனை மூலம் 24 மணி நேர சேவை வழங்கப்படவேண்டும். இவ்வாறு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் DEPUTATION என்ற பெயரில் வெளி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதால் - இந்த சேவை பாதிக்கப்படுகிறது.
எனவே - டாக்டர் வில்ஃபர் அவர்கள் உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சை பணிகளை செய்திட உத்தரவிடவும், அடிக்கடி - ஆறு மருத்துவர்கள் மட்டும் கொண்டு இயங்கும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நடைமுறையை நிறுத்திடவும் உத்தரவிட - வேண்டி தமிழக முதலமைச்சரின் சிறப்பு பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அரசு செயலாளர், DMS மற்றும் மாவட்ட ஆட்சியர் - ஆகியோரிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) கோரிக்கை மனு வழங்கியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|