வெறும் 500 ரூபாய் தொகையை மட்டும் செலவு செய்து, நகரில் பாதுகாப்பான சமுதாயத்தை ஏற்படுத்த முன்வருமாறு காயல்பட்டினம் நகர பொதுமக்களை - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்புடன் (மெகா) கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் - அறிமுகம் இல்லாத நபர்களை - வீட்டு பணிகளில் அமர்த்துவதிலும் (DOMESTIC HELP), அவர்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவதிலும் (TENANCY) மற்றும் நிறுவனங்களில் பணியமர்த்துவதிலும் (JOB OPPORTUNITY) அச்சம் அதிகரித்து வருகிறது.
இது போன்ற காரியங்கள் - கடந்த காலங்களில், எவ்வித சிக்கல் மற்றும் சிரமம் இல்லாமல் நடந்துவந்தாலும் - தற்சமயம் - நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேறு பகுதிகளில் குடியேறுவது சாதாரணம் ஆகி வரும் சூழலில் - பொது மக்கள் மத்தியில் - ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது மறுக்க முடியாது.
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம், கடந்த சில ஆண்டுகளாக - நகரின் பாதுகாப்பை அதிகரிக்க - தெருக்களின் சந்திப்புகளில் CCTV கேமரா பொருத்திட - அனைத்து ஜமாஅத்துகளையும், ஊர் நல குழுக்களையும், பொது நல அமைப்புகளையும் வலியுறுத்தி வருகிறது.
மேலும் - வாடகைக்கு வீடு கேட்டு வருவோரின் விபரங்களை, நாட்டின் பல்வேறு நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் படிவம் போல - ஒரு படிவத்தில் சேகரிக்கவும் - மெகா அமைப்பு, வலியுறுத்திவருகிறது. இதற்கான மாதிரி படிவங்களை, மெகா அமைப்பு அனைத்து ஜமாஅத்துகளுக்கும் - பல முறை அனுப்பியுள்ளது.
வாடகைக்கு வீடு விடுவோர், பணியாளர்களை பணியமர்த்துவோர், வீட்டு பணிகளில் பணியாளர்களை அமர்த்துவோர் - தற்போது, 500 ரூபாய் செலவில் - காவல்துறை மூலம், சம்பந்தப்பட்ட நபர்களின், பின்னணி விபரங்கள் பெறலாம். இந்த சேவையை, தமிழ்நாடு காவல்துறை - இணையவழியில் வழங்குகிறது.
அதற்கான முகவரி:
https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NewRegister?18
இதற்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படவேண்டும். கட்டணத்தையும் இணையதளத்தில் செலுத்தலாம்.
காவல்துறை ஆய்வில் - சம்பந்தப்பட்டவர் அடையலாம் (IDENTITY VERIFICATION), அவர் முகவரி (ADDRESS VERIFICATION) மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் அவர் மீது ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா (CRIME RECORDS SEARCH) போன்றவை உறுதி செய்யப்படும்.
இதில் முக்கியம் என்னவென்றால் - சம்பந்தப்பட்ட நபர், இந்த ஆய்வுக்கு சம்மதித்து கடிதம் (CONSENT LETTER) வழங்கவேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்ற விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
====================
வீடு வாடகை மற்றும் வீட்டு வேலைக்கு பணியமர்தல்
====================
-- விண்ணப்பம் செய்பவர்
அரசு வழங்கியுள்ள ஏதாவது புகைப்படம் கொண்ட ஆவணம்
-- யாரை ஆய்வு செய்யவேண்டுமோ அவர் குறித்து இணைக்கவேண்டிய ஆவணங்கள்
அவரின் புகைப்படம்
அவரின் முகவரி அடங்கிய ஏதாவது அரசு ஆவணம்
அந்த நபரின் ஒப்புதல் கடிதம் (மாதிரி இணைக்கப்பட்டுள்ளது)
====================
வேலையில் சேர்ப்பதற்கு முன்பு ஆய்வு
====================
-- விண்ணப்பம் செய்பவர்
அரசு வழங்கியுள்ள ஏதாவது புகைப்படம் கொண்ட ஆவணம்
நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டை
-- யாரை ஆய்வு செய்யவேண்டுமோ அவர் குறித்து இணைக்கவேண்டிய ஆவணங்கள்
அவரின் புகைப்படம்
அவரின் முகவரி அடங்கிய ஏதாவது அரசு ஆவணம்
அந்த நபரின் ஒப்புதல் கடிதம் (மாதிரி இணைக்கப்பட்டுள்ளது)
ஆய்வு செய்யவேண்டி, நிறுவனம் - காவல்துறைக்கு எழுதிய - கடிதம்
இந்த விபரங்கள் அனைத்தையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
பதிவு செய்து - பொதுவாக 15 தினங்களில், காவல்துறை ஆய்வு செய்து - தனது அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|