காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் கே.எம்.டீ. மருத்துவமனை 1990ஆம் ஆண்டு மார்ச் 04ஆம் நாளன்று துவக்கப்பட்டது. அது முதல் அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக டாக்டர் இஸ்மாஈல் பணியாற்றி வந்தார். தொடர்ந்து 29 ஆண்டுகள் பணியிலிருந்த அவர், தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார்.
அவரைப் பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி, மருத்துவமனை கேளரங்கில், 29.11.2019. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. மருத்துவமனை நிர்வாகிகளும், அறங்காவலர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அதன் தலைவர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ – பணி நிறைவு பெறும் மருத்துவருக்கு பயனாடை அணிவிக்க, செயலாளர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, கே.எம்.டீ. மருத்துவமனையின் மருத்துவர் பாவநாசகுமார், மருத்துவமனை நிர்வாகிகள் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர். மருத்துவர் இஸ்மாஈலின் சுமார் 30 ஆண்டு கால சேவைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.
03.12.2019. செவ்வாய்க்கிழமையன்று 10.00 மணியளவில், மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், குழந்தைகள் நல புதிய மருத்துவராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் டி.முஹம்மத் கிஸார் பொறுப்பேற்றார். அவரை, மருத்துவமனை நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்றனர்.
தகவல் & படங்கள்:
‘ஸ்கட்’ அபூ
|