காயல்பட்டினத்தில் அண்மைக் காலமாகப் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் உட்பட பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு நகரிலுள்ள பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், நகரில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் வைத்தி, பேரவைத் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல்ஹசன் கலாமி அவர்கள் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும் பேரவை சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டது.
நகரை மேற்க்கு, கிழக்கு, வடக்கு, தெற்க்கு என நான்கு பகுதிகளாக பிரித்து, குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்தக் குழு அந்தந்த பகுதிகளில் செய்யவேண்டிய நிவாரணப்பணிகளை நாளை காலை முதல் செய்ய உள்ளார்கள்.
ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு JCB இயந்திரமும், தண்ணீரை உரியக்கூடிய மோட்டாரும் வழங்க நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழுவிற்கு தலைவர்களாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு :
மேற்க்குப் பகுதி : ஜனாப் J.A. லரீஃப் அவர்கள், செல் : 9443527749,
கிழக்குப் பகுதி : ஜனாப் சொளுக்கு A.J. முஹியத்தீன் அவர்கள், செல் : 09486812550,
வடக்குப் பகுதி : ஜனாப் K.M.T. சுலைமான் அவர்கள், செல் : 9486655338,
தெற்க்குப் பகுதி : ஜனாப் ஆதம் சுல்த்தான் அவர்கள், செல் : 6383514163,
பாதிப்புள்ள பகுதிகளைச் சார்ந்தவர்கள் இவர்களின் எண்களில் தொடர்பு கொள்ளலாம். என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நகரின் பல்வேறு பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |