மலபார் காயல் நல மன்றப் பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் நிர்வாக வெற்றிடப் பொறுப்புகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் புதிய செய்தித் தொடர்பாளர் எச்.ஏ.அஹ்மத் மதார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மலபார் காயல் நல மன்றத்தின் 25 வது பொது குழு கூட்டம் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள M.K.நெய்னாகாக்கா வீட்டு மாடியில் வைத்து நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்... அதன் நிகழ்முறைகளும்.. தீர்மானங்களும்.
நிகழ்வின் துவக்கமாக பொருளாளர் N. மொகுதூம் மீரா சாஹிப் அவர்களின் மகனார் M.M.S.ஹமிது அஷ்கர் அவர்கள் அழகிய குரலில் அருள்மறை ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். அடுத்ததாக செயற்குழு உறுப்பினர் ஜனாப் M.G. செய்யது இபுராஹிம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் J.நாகூர் மீரான் அவர்கள் தொகுத்து வழங்கினார். அடுத்ததாக கடந்த கூட்டத்தின் மினிட்ஸை மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ஜனாப் H.A.அஹமது மதார் அவர்கள் வாசித்து கூட்டத்தின் அங்கிகாரம் (ஒப்புதல்)பெற்று கொண்டார்.
தலைமையுரை
நமது மன்ற தலைவர் ஜனாப் S.சேக் சலாஹுதீன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
அவர் தம் உரையில் நம் முன்னால் துணை தலைவர் N.M. முஹியத்தீன் அப்துல் காதர் அவர்களின் மரணத்தை தொடர்ந்து புதிய துணை தலைவராக ஜனாப் T.S.சாஹிப்தம்பி அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டதையும் தற்போது உள்ள 15 செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த காலி இடத்திற்கு புதிய செயற்குழு உறுப்பினராக ஜனாப் S.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டதையும் முறைப்படி அறிவித்தார்.
இந்த வருடமும் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளின் நிவாரண பணிகளுக்கு வேண்டி கலெக்ஷன் செய்யப்பட்ட தொகையை சேதமடைந்த வீடுகளின் பராமரிப்பு பணிகளுக்கு செலவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோழிக்கோடு மாவட்டம் ஒலவன்னா பகுதியில் உள்ள ரஷிதா என்ற பெண்மணியின் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் விளக்கி கூறினார். மேலும் அவர் தம் உரையில் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனைக்கு எடுக்கப்பட்டு இருந்த வருங்காலத்தில் மக்வாவிற்கு என ஒரு அவசர கால நிதி (EMERGENCY) உருவாக்கி வைப்பதை பற்றி நாம் இங்கு கருத்து பரிமாற்றம் செய்து தீர்மானம் எடுத்து கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார்.
செயலாளர் உரை
அடுத்ததாக நமது மன்ற செயலாளர் ஜனாப் A.S.I. முஹம்மது ஸிராஜ் அவர்கள் உரையாற்றினார்.
அவர் தமது உரையில் இந்தப் பருவத்தில் மூன்று செயற்குழுவும் மழை வெள்ளத்தின் நிவாரண பணிகளுக்கு 5 சிறப்பு கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்று இருப்பதாக கூறினார்.
மேலும் இன்று நாம் கலந்து கொண்டு இருப்பது 25 வது பொதுக்குழு என்பதையும் சுட்டி காட்டினார்.
இதுபோன்று இன்னும் பற்பல ஆண்டுகள் மக்வா சீரூம் சிறப்புடன் பணியாற்றிட துஆ செய்தார்.
புதிய துணை தலைவர் நியமனம், புதிய செயற்குழு உறுப்பினர் நியமனம், புதிய செய்தி தொடர்பாளர் ஜனாப் H.A.அஹமது மதார் ஆகியோர் நியமிக்கபட்ட அடிப்படை விவரங்களை விளக்கி கூறினார்.
கடந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கபட்டு இருந்தபடி... '"மக்வாவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நம் மன்றத்தின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் வகையில் மாதந்தோறும் நடைபெறும் செயற்குழு கூட்டங்களில் (EC)கலந்து கொண்டு செயற்குழுவின் நடைமுறைகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் மூன்று நபர்களை சிறப்பு அழைப்பாளராக அழைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அந்த முறையில் இந்த பொதுக்குழு வரையில் நடைபெற்ற 3 மாத செயற்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் A.M.ரஞ்சித் குமார் , S.I.சேகு அப்துல் காதர் , M.A மஹ்பூபு சுபுஹானி , S. ஜெய்னுல் ஆப்தீன் ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.
கடந்த மாதம் நமது பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் தந்தையின் மருத்துவ செலவுக்கு வேண்டி பண உதவிகள் செய்யப்பட்டதையும் கூறினார். மேலும் நமது முன்னால் துணை தலைவரின் மகத்தான சேவைகளை நினைவு கூர்ந்து அவரின் மஃபிரத்திற்கு துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டி கொண்டார்.
மஃரிப் தொழுகையை அல்-ஹாஃபிழ் அரபி முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் வழி நடத்தினார்.
கணக்கு தாக்கல்
அடுத்ததாக மன்றத்தின் பொருளாளர் ஜனாப் N. மொகுதூம் மீரா சாஹிபு அவர்கள் கடந்த பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் வரையுள்ள கணக்குகளை தாக்கல் செய்தார்.
அதனை கூட்டம் ஒப்புதல் வழங்கியது, மேலும் நம் மன்றத்தின் செயல்பாடுகளைக் பார்த்து நம் மன்றத்தின் உறுப்பினராகவோ, ஆதரவாளர்களாகவோ இல்லாதவர்கள் கூட நன்கொடை தருவதாக தெரிவித்தார்.
கணக்கு தனிக்கையாளர் உரை
இந்த பருவத்திற்கான கணக்கு தனிக்கையாளரான K.M.முத்து முஹம்மது ரபீஃக் (KRS) அவர்கள் உரையாற்றினார். "Old job , New experiences ... என்பதை மேற்கோள் காட்டி தனது இந்த புதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பொருளாளர் தனது சிரமமான வேலை சுமைகளுக்கு இடையிலும் தனது பணியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் . கணக்குகள் எல்லாம் சரியாக உள்ளது.
மக்வாவின் செயற்குழு உறுப்பினர்கள் தனது சொந்த பணத்தை போட்டு வேலை செய்பவர்கள் என பாராட்டினார்.
அறங்காவலர் உரை
அடுத்ததாக நமது மன்றதின் ஷிஃபாவின் அறங்காவலர் சாளை M.A.K முஹம்மது உதுமான் உரையாற்றினார். மக்வா 2010 ல் தொடங்கப்பட்டு இன்று 25 வது பொதுக்குழுவை அடைந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே.. என்று புகழ்ந்தார். இந்த பருவத்தின் செயற்குழு உறுப்பினர்களின் பணிகள் சிறப்பான முறையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். ஷிஃபாவின் பணிகள் சிறப்பாக செயல்படுவதாகவும் K.M.T ல் அமையவுள்ள டயாலிசிஸ் யூனிட் பற்றிய ஏற்பாடுகளை விவரித்தார்.
மக்கள் மருந்தகம் நல்ல முறையில் செயல்படுவதாகவும், இன்ஷா அல்லாஹ்... மக்கள் மருந்தகத்தின் எதிர்கால திட்டமான Won medical laboratory பற்றிய செய்திகளை விளக்கி கூறினார்.
மக்வா உறுப்பினர்கள் பணம் உதவி செய்வதில் சளைத்தவர்கள் இல்லை. எந்த அவசர உதவிகளுக்கும் நாடி சென்றால் அதை முழுமையாக நிறைவேற்ற கூடியவர்கள் என பெருமிதம் கொண்டார்.
மழை வெள்ள நிவாரண பணிகளை விரிவாக பேசினார்.
கருத்து பரிமாற்றம் & தீர்மானங்கள்
மன்றத்தின் வளர்ச்சிக்கு கருத்துக்களும் ஆலோசனைகளும் தெரிவிக்கபட்டன.
குறிப்பாக மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் இரத்த உறவுகளுக்கு வேண்டி அவசர கால (Emergency fund) ஏற்படுத்துவது பற்றிய கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.
நம் மன்றத்தின் மூலம் கொடுக்கப்படும் மருத்துவ உதவிக்கான நிதி அனைத்துமே Emergency fund என்ற அடிப்படையிலும் , பணத்தை கையில் வைத்திருப்பது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையிலும்
Emergency fund என்பது சாத்தியமில்லை என்று அதிக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து,
அது தேவையற்றது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மக்வா தனது உறுப்பினர்களுக்கு தேவைபடும் மருத்துவ உதவிகளை முன்னின்று செயல்படுத்தும் என்றும்,
அவசர தேவைகளுக்கு நம் உறுப்பினர்களிடம் சென்று இதன் தேவைகளை எடுத்து கூறி உடனடியாக செயல்பட முற்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
நன்றியுரை
இறுதியாக செயற்குழு உறுப்பினர் S.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் நன்றி கூற கஃபாரா துஆ உடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
இரவு உணவு
வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவாக இடியப்பமும், காயல் களறி கறியுடன் சுவைமிகு ஜவ்வரிசியும் பரிமாறப்பட்டது. உணவு ஏற்பாடுகளை துணை தலைவர் T.S.சாஹிப்தம்பி தலைமையில் K.M.நெய்னா முஹம்மது, M.S. அஹமது மரைக்கார், M. முஹம்மது சுலைமான், A.S.I உவைஸ்னா லெப்பை,
ஆகியோர் மிக சிறப்பாக செய்தார்கள்.
கலந்து கொண்ட அனைவரும் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விதம் சிறப்பான முறையில் அமைந்தது.
உறுப்பினர்களில் அதிகமானோர் தனது குழந்தைகளையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
கூட்ட நிகழ்வுகளின் படங்களை https://photos.app.goo.gl/KNqVG3xUFPxbFaKP7 என்ற இணைப்பில் சொடுக்கித் தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 11:18 / 08.12.2019.]
|