அடுத்தடுத்த செயற்குழுக் கூட்டங்களில், பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து மூன்று பேர் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுவர் என்றும், அவர்களுக்கு – செயற்குழு உறுப்பினர்களுக்குள்ள உரிமைகளும் அக்கூட்டத்தில் வழங்கப்படும் என்றும் மலபார் காயல் நல மன்ற (மக்வா) பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மலபார் காயல் நல மன்றத்தின் 24 வது பொது குழு கூட்டம் 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள M.K.நெய்னாகாக்கா வீட்டு மாடியில் வைத்து நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...
அதன் நிகழ்முறைகளும்.. தீர்மானங்களும்.
ஆரம்பமாக மன்ற பொருளாளர் மொகுதூம் அவர்களின் மகனார் M.M.S.முஹம்மது ஃபஹீம் அவர்கள் அழகிய குரலில் அருள்மறை ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
அடுத்ததாக நமது துணை செயலாளர் J. நாகூர் மீரான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிகளை S.N.மீரான் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அடுத்ததாக கடந்த கூட்டத்தின் மினிட்ஸை செயற்குழு உறுப்பினர் H.A.அஹமது மதார் அவர்கள் வாசித்து கூட்டத்தின் அங்கீகாரம் பெற்றுக்கொண்டார்.
தலைமையுரை
அடுத்ததாக நமது மன்ற தலைவர் S.சேக் சலாஹுத்தீன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவர் தனது உரையில் இந்த பருவத்தின் முதலாவது பொதுக்குழு இதுவென்றும் குறிப்பிட்டார். காயல்பட்டினத்தில் ஷிஃபா மூலம் நடத்தப்பெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில் தான் கலந்து கொண்ட விஷயங்களையும் நினைவுபடுத்தினார். கேரளா மாநில மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு பனமரம் பகுதியில் உள்ள ஒரு வீடு வகைக்கு வாக்களித்த முழு பணமும் கொடுக்கபட்டதையும், தழப்புழா பகுதியில் உள்ள ஒரு வீட்டு சீரமைப்பு பணிகளுக்காக வேண்டி நாம் வாக்களித்த பணம் கொடுக்கப்பட்டதையும் நினைவுப்படுத்தினார். நமது மன்றத்தின் இந்த பருவத்திற்கான செய்தி தொடர்பாளராக ஜனாப் T.S.சாஹிப் தம்பி அவர்களை நியமிக்கப்பட்டதையும், இந்த பருவத்திற்கான கௌரவ ஆலோசகர்களாக ஜனாப் M.K. நெய்னா முஹம்மது,ஜனாப் S.L.அபுல் ஹசன்,ஜனாப் S.A.K. செய்து இப்ராஹிம் ஆகியோர் தேர்ந்தேடுக்கப்பட்டதையும் அறிவித்தார். பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயற்குழு முழுமையாக செயல்படுத்தும் என்றும், எங்களின் பணிகள் நல்ல முறையில் நடைபெற அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
செயலாளர் உரை
அடுத்ததாக நமது மன்ற செயலாளர் A.S.I. முஹம்மது ஸிராஜ் அவர்கள் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் இந்த பருவத்தில் இதுவரை 6 செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது எனவும், இதில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பின்வருமாறு கூறினார்.குறிப்பாக நமது மன்ற உறுப்பினர் ஒருவரின் மகனின் அறுவை சிகிச்சைக்காக மக்வா நேரடியாக விசாரித்து அவருக்கு தேவையான முழு பணத்தையும் வழங்கியதையும் விளக்கமாக கூறினார்.மன்ற தளவாட சாமான்களுக்கு பொறுப்பாளர்களாக ஜனாப் U.Lசெய்தஹ்மது அவர்கள், மற்றும் ஜனாப் M.S.அஹமது மரைக்கார் ஆகியோர் நியமிக்க பட்டுள்ளதையும் கூறினார்.பொருட்கள் தேவைப்படுபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். மக்வா உண்டியல் பொறுப்பாளராக ஜனாப் J.ஜமால் நியமிக்கப்பட்டு இருப்பதையும் கூறினார்.அதிகமான உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
கணக்கு தாக்கல்
அடுத்ததாக மன்றத்தின் புதிய பொருளாளர் N. மொகுதூம் மீரா சாஹிபு அவர்கள் கடந்த பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் வரையுள்ள கணக்குகளை தாக்கல் செய்தார். அதனை கூட்டம் ஒப்புதல் வழங்கியது.
ஷிஃபா அறங்காவலர் உறை
அடுத்ததாக நமது மன்றதின் ஷிஃபாவின் அறங்காவலர் சாளை M.A.K முஹம்மது உதுமான் உறையாற்றினார்.
ஷிஃபாவின் பணிகள் மிக சிறப்பான முறையில் துரிதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.ஷிஃபாவின் உதவியுடன் K.M.T ஆஸ்பத்திரியில் அமையவுள்ள டையலிஸிஸ் சென்டர் பற்றிய விளக்கங்களை எடுத்து கூறினார்.இதில் நாமூம் மிக சிறப்பாக பங்களித்து உள்ளோம் என்பதை நினைவு படுத்தி,தூஆ செய்தார்.ஷிஃபா நிர்வாகிகளின் பொறுப்பு காலம் நிறைவடைய உள்ளதாகவும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.மக்கள் மருந்தகம் நல்ல முறையில் செயல்படுவதாகவும் கூறினார்.
கருத்து பரிமாற்றம் & தீர்மானங்கள்
மஃக்ரிப் தொழுகை ஜமாத்தாக தொழுகபட்டது.
அதை தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மன்ற துணை தலைவர் N.M.. மெய்தீன் அப்துல் காதர் நல்ல விளக்கத்துடன் பதில் அளித்தார்.
நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் சில:-
1. ஜனாப் K.M. முத்து முஹம்மது ரபீக் (KRS)அவர்கள் கணக்கு தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நம் மன்றத்தின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் வகையில் மாதந்தோறும் நடைபெறும் செயற்குழு கூட்டங்களில் (EC) கலந்து கொண்டு நம் EC நடைமுறைகளை பற்றி அறிந்து கொள்வதற்காக நம் பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து மூன்று நபரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பதென்றும் , அந்த மூன்று நபரில் ஒருவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஒருவராக இருப்பவர் என்றும் , மற்ற இருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் , அந்த மூன்று நபருக்கும் EC உறுப்பினர்களை போலவே கருத்து சொல்லவும் , E.C உறுப்பினர்கள் போலவே அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என தீர்மானிக்கப்பட்டது.
3. ஷிஃபாவின் வரும் பருவத்திற்கும் அறங்காவலராக M.A.K. முஹம்மது உதுமான் அவர்களே தொடர வேண்டும் என கூட்டம் தீர்மானித்தது.
நன்றியுரை
இறுதியாக மூத்த செயற்குழு உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான ஜனாப் சாஹிப்தம்பி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
கஃபாரா தூஆ உடன் கூட்டம் நிறைவு பெற்றது.
வந்திருந்த அனைவருக்கும் சுவைமிகு காயல் தேனீருடன் சூடான பக்கோடாவும் பரிமாறப்பபட்டது.
மழையும் பொருட்படுத்தாமல் பங்கேற்ற அனைவரும் தங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|