காயல்பட்டினம் "மெகா / நடப்பது என்ன?" அமைப்பின் துணைத் தலைவரும், நகர்மன்ற 13ஆவது வார்ட் முன்னாள் உறுப்பினருமான - ஆஸாத் தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இன்று 01:45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 58.
அன்னார்,
மர்ஹூம் மெத்தை வீடு ஷம்சுத்தீன், மர்ஹூம் அ.க.காதிர் அலீ ஆகியோரின் பேரனும்,
மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஷாஃபிஈ அவர்களின் மகனும்,
மர்ஹூம் முல்லாக்கா முஹம்மத் இப்ராஹீம் அவர்களின் மருமகனாரும்,
கே.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரது மருமகனும்,
எம்.எஸ்.ஷாஃபி ஸஈத் என்பவரின் தந்தையும்,
எம்.ஏ.சி.சதக் ஜாபிர் என்பவரது மாமனாரும்,
முல்லாக்கா ஷேக் அப்துல் காதிர், மர்ஹூம் முல்லாக்கா ஜவ்ஜலீ, முல்லாக்கா தமீமுல் அன்ஸாரீ, முல்லாக்கா கலீலுர் ரஹ்மான், ‘மெகா’ அமைப்பின் பொருளாளர் ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் ஆகியோரின் மச்சானும்,
எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் சகலையும்,
ஹாஃபிழ் முல்லாக்கா முஹம்மத் இப்ராஹீம் ஃபஹீமுல்லாஹ், முத்து ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமாவும்,
காயல்பட்டினம் தாயிம் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், எம்.ஏ.சி.சுஹைல் இப்ராஹீம் ஆகியோரின் சிறிய தந்தையும்,
எம்.இ.கைலானீ, கப்பல் செய்யித் அஹ்மத், கப்பல் காதிர் அலீ ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று 20:30 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|