செய்தி: டெங்கு காய்ச்சல் பற்றி - ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (ஜூன் 03) மாலை 5.00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:டெங்கு காய்ச்சல் பற்றி -... posted byLebbai (Riyadh)[03 June 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19143
இன்று (ஜூன் 2) என்று தவறுதலாக உள்ளது. ஜூன் 3 என்று திருத்தி கொள்ளவும்.
Re:“முத்துச்சுடர்” மாத இதழ் ... posted byLebbai (Riyadh)[02 June 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19132
மாஷா அல்லாஹ், மீண்டும் புது பொலிவுடன் வலம் வர இருக்கும் மாத இதழை வாழ்த்தி வரவேற்ப்போம். இதன் மாத/ வருட சந்தா சந்தா எவ்வளவு, எப்படி பெறுவது, தொடர்பு முகவரிகள் போன்ற தகவல்களை வெளியீட்டாளர்கள் தந்துதவினால் நன்றாக இருக்கும்.
గ్రీటింగ్లు (Greeting in Telegu ) posted byLebbai (Kayalpatnam)[14 May 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 18860
நல்வாழ்த்துக்கள்.
உங்கள் பணி தொடரட்டும். இயன்றதை முயன்று செய்யுங்கள். இறை அருள் கிட்டும்.
மும்பை, திருச்சி போன்ற நகரங்களில் ஏற்கனவே மன்றங்கள் உண்டு, அதை மேலும் பலபடுத்த முயற்சி செய்யுங்கள்.
மும்பை வாழ் நம் மக்கள், பல்லாண்டுகளாக (இன்று பல மன்றங்கள் இருந்தும் செய்யும் சேவைகளை மன்றம் இல்லாமலே) இலை மறை காயாக இருந்து, அங்கு வருபவர்களுக்கும், வெளிநாடு செல்பவர்களுக்கும் பல வசதிகளை செய்துகொடுப்பவர்கள். அவர்கள் நற்பணி என்றும் தொடரட்டும்.
Re:குத்பா பெரிய - சிறிய பள்ள... posted byLebbai (Riyadh)[28 April 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18579
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து, சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் மக்கள், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஷப்ருன் ஜமீல் என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம். துஆ செய்தவனாக,
செய்தி: ஜூன் 04இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் அமைப்பின் சார்பில் ஆண்டு விழா மற்றும் மீலாத் விழா! மவ்லவீ ஷேக் அப்துல்லாஹ் ஜமாலீ சிறப்புரை!! வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜூன் 04இல் ரஹ்மத்துன் லில... posted byLebbai (Riyadh)[25 April 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18504
அஸ்ஸலாமு அழைக்கும்,
உங்கள் அமைப்பு மூலம் நடை பெறும் விழாவில் ஏழை மாணவர்களுக்கு இக்ரா மூலம் உதவி தொகை வழங்குவது அறிந்து சந்தோஷம். இது மற்ற உள்ளூர் மன்றங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வருங்காலத்தில் அமைய வாய்ப்புண்டு.
அடுத்து, உங்கள் மன்றத்தால் கடந்த முறை நடைபெற்ற விழாவில் திருமாவளவன் பங்கு பெற்று உரை நிகழ்த்தினார். இவர் பேச ஆரம்பிக்கும் முன்பு, சவான்னா பாதுல் அஷ்ஹாப் ஆலிம் அவர்கள் இஸ்லாத்தை பற்றி மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவாக விளக்கமாக உரையாற்றி அழைப்பு பணி செய்து கொண்டு இருந்தார்கள். அதில் பெரும்பாலான மாற்று மத சகோதர்கள் பங்கு பெற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க, ஆலிம் அவர்கள் சாதுர்யமாக பயன்படுத்தி நன்மை பெற்று கொண்டார்கள்.
Re:ஒரு செல் ஊசலாடுகின்றது...... posted byLebbai (Riyadh)[21 April 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21021
அஸ்ஸலாமு அழைக்கும்,
கட்டுரையாளரின் கட்டுரை அருமை. இதில் செல்போன் பிள்ளைகளிடம் தந்தால், கண்காணிக்க வழிகள் சொல்லப்பட்டுள்ளது. முடிந்த அளவு, கையில் கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது.
மிகவும் அவசிய சமயத்தில், பெற்றோர்கள் தன் செல்போனை தற்காலிகமாக கொடுத்து உபயோகிக்க சொல்லலாம். (பெரியோர்கள் பயன்படுத்தும் சொந்த செல்போன்களை தவிர்த்து, தனியாக பொது உபயோகத்திற்கென்று ஒரு செல்போன் வீட்டில் எல்லோரும் பயன்படுத்த வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்).
கலாசார சீரழிவுக்கு, செல்போன் ஒரு முக்கிய காரணிகளாக இருக்கிறது. இது போன்று முறையாக ஹிஜாப் பின்பற்றாமை, இளமையிலேயே அடிப்படை மார்க்க கல்வி புகுட்டாமை, போன்றவை அதி முக்கிய காரணங்கள் என்றால் மிகையாகாது.
உலக கல்விக்காக நாம் (மார்க்க கல்விகளை புறக்கணித்து) வெள்ளிக்கிழமை-களை தியாகம் செய்யவில்லையா? இதற்கு யார் காரணம், நம்மவர்கள் நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகமா, அரசு அதிகாரிகளா? நிச்சயமாக அரசு இதில் நிர்பந்தம் செய்யாது.
மார்க்க கல்வி பேசும் நம்மவர்கள் எத்தனை நபர் இதை மனதளவில் ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள்?
இன்ஷா அல்லாஹ், இது சம்பந்தமாக யாராவது ஒரு அழகிய கட்டுரை தந்து, சமுதாயத்தின் கண் திறந்தால் அல்லாஹ் நம்மனைவருக்கும் கிருபை செய்வான்.
Re:பழுதடைந்த நிலையில் நகர்மன... posted byLebbai (Riyadh)[16 April 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18272
தமிழ்நாட்டில் எந்தவொரு நகராட்சியாகட்டும், பேருராட்சியாகட்டும் முறையாக டெண்டர் விடப்பட்டு தான் வேலை நடக்க முடியும். தமிழகத்தில் உள்ள எல்லா நகராட்சிகளின் டெண்டர் காண : (தற்போது காயல்பட்டின டெண்டர் முதலில் உள்ளது.
நல்ல வாய்ப்பிருந்தும், தரமான தகுதியான ஒப்பந்தகார்கள் float ஆகிய டெண்டரில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை திறமையற்றவர்கள் ஒப்பந்தம் எடுத்து பயன்படுத்தி கொள்ளுகிறார்கள்.
இந்த அறை பழுதை பொறுத்தவரை, இது ஒரு பெரிய ப்ராஜெக்ட் அல்ல, ஆனால் அவசியமானது. இதை அவசர கால (Emergency basis ) அடிப்படையில் இது போன்ற அசௌகரியங்களை நிவர்த்தி செய்ய சட்டத்தில் வாய்ப்பிருக்கும் என்று எண்ணுகிறேன்.
Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச... posted byLebbai (Riyadh)[03 April 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20692
அஸ்ஸலாமு அழைக்கும்,
மஹ்மூத் மாமாவின் கட்டுரை அருமை.
ஒலிபெருக்கியை ஒலி மாசு ஏற்படாதாவண்ணமும், பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கா வண்ணமும் உபயோகிப்பது நலம்.
உலக கல்வி, உலக பாடம் என்று எந்நாளும் நாம் உலக கல்விக்காக செலவழிக்கும் மணித்துளிகள் தான் எத்தனை எத்தனை? மார்க்க விசயத்துக்காக (நான் உற்பட) செலவழிக்கும் நேரம் என்ன? ஆற அமர்ந்து சிந்தித்தால் புரியும்.
மிதமான ஒலி வெளியாகும் விதமாக, மார்க்க நிகழ்வுகளை (மார்க்க உபன்னியாசம்) ஒளி பரப்பினால், அதில் தவறேதுமில்லை.
தற்போது கேபிள் டிவி மூலம் வரும் மார்க்க நிகழ்ச்சிகள் (ஏன் வாராந்திர ஜும்மா பயான்) கூட அதிக அளவில் ஒலி பெருக்கியில் ஒலி பரப்பு செய்கிறார்கள். கேபிள் டிவி கேட்க வாய்ப்பு உள்ள நிகழ்வுகள், ஒலிபெருக்கியில் ஒலி பரப்புவதை தவிர்க்கலாம், அல்லது மிதமாக செய்யலாம்.
முதலில் நம் வீட்டில் உள்ள தொ(ல்)லைகாட்சியை கட்டுபடுத்தினாலே பெரிய அளவில் ஒலி மாசு குறைந்து விடும்.
இரண்டாவது, கைபேசி. அது கைபேசியா காது பேசியா? அந்த அளவு சிறுவர்கள் முதல் இளைஞர் வரை எப்போது காதில்வைத்து வேண்டாத பேச்சுக்கள் . இதுவெல்லாம் கூட பல நோய்களுக்கு காரணம்.
Re:மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீப் ... posted byLebbai (Riyadh)[02 April 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18023
அஸ்ஸலாமு அலைக்கும்,
புதிய நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மார்க்கப்பணி என்றும் தொடரட்டும்.
தங்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை, வழமைபோல் ஆலிம் பெருந்தகைகளின் பயான்களை இணையதளத்தில் சேமித்து எங்களுக்கு தாருங்கள். வெளிநாடு வாழ் எங்களுக்கு ஒரு மார்க்க ஊக்க மருந்தாக இருக்கும்.
வல்ல இறைவன் நம்மனைவர்களையும் வெற்றியாளர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக! ஆமீன்.
Re:பார்வை படாத பக்கங்கள்!... posted byLebbai (Riyadh)[24 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20996
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான கட்டுரை வழங்கிய புஹாரி காக்கா அவர்களுக்கு நன்றி.
பதினான்கு அல்லது பதினைந்து வருட உழைப்புக்கு பின் எழுதும் தேர்வில் தோல்வி அடைந்தால், அதற்கு அவர் தம் "திறமின்மை" என்பது மட்டும் ஒற்றை காரணியல்ல, அதன் பின் சமூக/பொருளாதார/குடும்பச்சூழல் போன்ற காரணிகளின் அழுத்தம் உள்ளது என்று தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross