Re:..பியூலா டீச்சர் மரண செய்தி posted byhaaja arabi (Hong kong )[01 February 2016] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 43012
பியூலா டீச்சர் நீண்டகாலமாக நோயோடு போராடி இன்று மரண செய்தி அறிந்து அதிர்ச்சி. எங்கள் மூத்த சகோதரர்களின் டியூஷன் டீச்சர் ஆக அவரது தாயாருடன் அறுபதுகளில் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றது இன்னும் மலரும் நினைவில். அன்றில் இருந்து பல ஆண்டுகள் பார்க்கும் போதெல்லாம் பேர்சொல்லி அன்பொழுக அழைப்பார்.
நல்ல அன்புமிக்க ஆசிரியை. அவர் கைபிடித்தது எனது ஆசிரியர் மற்றும் எல்கே ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியரும் திரு த. தங்கபாண்டியன். நல்லவர் நல்லாசிரியர். நமதூரோடு (யூ எஸ் சி) ஒன்றிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து நலன் விசாரித்தபோது, பியூலாடீச்சர் உடல் நலம் பாதித்து இருப்பதாக சொன்னார்கள். ரொம்ப மன கவலை.
எல்லா உயிரும் மரணத்தை சுகித்தே தீரும் எனும் நியதிக்கு இணங்க அவரின் மரணம் ஏற்பட்டிருக்கு.
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைஞ்சுகிறேன். அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார் குறிப்பாக எனது ஆசிரியர் தங்க பாண்டியன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
Re:.த.மு.மு.,ம.ம.க.க., புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !!! !! posted byஹாஜா அரபி (ஹாங் காங்)[17 September 2014] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 37322
த.மு.மு.க. மற்றும் ம.ம.க. வின் நகர நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டு பொறுப்பேற்க இருக்கிறார்கள் என அறிகிறேன்.
காயலின் இன்றைய நிகழ்வுகள், வரும் காலங்களில் நமக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதை இப்பவே உணர்த்துகிறது. அதை உணர்ந்து பொறுப்புடனும் புதிய உற்சாகத்துடனும் வீரியத்துடனும் செயலாற்ற வாழ்த்துகிறேன் நண்பர்களே !! உங்களின் தன்னலமற்ற, நேர்மையான பணிகளுக்கு அல்லாஹ் என்றும் துணை நிற்பான் !
Re:...கதீஜாம்மா ஹாஜீஇன் மறைவு !! posted byஹாஜா அரபி (Hong Kong)[02 February 2014] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 32962
கதிஜாம்மா ஹாஜீஇன் மரணச் செய்தி, அவர்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்க்கு இழப்பு! அவர்களின் வாழ்க்கை, அன்றைய காலங்களில் அவர்களின் உடை ஒழுங்கு, கண்ணிய மானது. எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அன்னவர், குடும்ப சந்திப்பின் போது, அவர்களோடு அளவளாவிய தருணங்கள் பசுமையானவை. எஸ். கே. அவர்களும் தன் சாச்சியை அடிக்கடி நினைவு கூறுவார்கள். குழந்தை செல்வத்தை, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லையே தவிர, எல்லோரிடமும் அன்பு செலுத்தினார்கள்.
அல்லாஹ், அவனது அளப்பரிய கருணைகொண்டு, அவர்களின் தவறுகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று, சுவனத்தை அளிப்பானாக! அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு, அழகிய பொறுமையை அளிப்பானாக.
செய்தி: ஹஜ் பெருநாள் 1434: சென்னையில் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..தன் கருத்து பதிவுகளில் நல்ல தமிழ் மணம் கலந்து தரும் மக்கியார், சில நேரம்...... posted byHaja Arabi (Hong Kong)[18 October 2013] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 30853
தன் கருத்து பதிவுகளில் நல்ல தமிழ் மணம் கலந்து தரும் மக்கியார், சில நேரம் சொற்பிழையோடு தருவதும் மக்கியாரின் தமிழ் அழகே அழகு!
இந்த கவி வரி
'தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை!
சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை!
என்று வரைய வேண்டும்.
இசை முரசின் கம்பீர குரலில் வெளிப்பட்ட இந்த கவி வரிகள், தன் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்காக கலைஞரின் கைவண்ணம் என்பர்.
Re: தன்முனைப்பு (ஈகோ) தவிர்த்து, இருவரும் மக்கள் நலப்பணியாற்றுவீர் ! posted byarabi haja (hong Kong)[24 June 2012] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 19599
இந்த இணைய தளத்தில் நகர் மன்ற தலைவி சகோ. ஆபிதா மற்றும் உறுப்பினர் சகோ. லுக்மான் ஆகியோரின் அறிக்கைக்கு பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. முதலில் அனைத்து சகோதரற்கும் நன்றி.
இவற்றில், ஒருவரை ஒருவர் தூண்டிவிடும் நோக்கில் பதிவு செய்யப்பட்டவைகளை தவித்து, நடுநிலையான நல்ல பல கருத்துக்களும் பதிவாகியுள்ளன.
என்னை பொறுத்தவரை தலைவரும், உறுப்பினரும் தத்தமது தளத்தில் - கடமை நோக்கில்- ஆதங்கத்தையும், அதற்க்கான விளக்கத்தையும் தந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களாகிய நாம் இருவரையும் தட்டிகொடுத்து, அவர்களது பணியை ஆற்றுமாறு உற்சாக படுத்தி தமது கருத்துக்களை பதிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அவர்களை தன்முனைப்பு (ஈகோ) ஆட்கொள்ளாமல், கருத்து வெளிப்பாடு அனைத்தும் மக்கள் நலனுக்கே எனும் பொது நலன் விஞ்சியிருப்பின், நிச்சயம் இந்த பரஸ்பர வாதத்தினால் மக்களுக்கு நன்மையே விளையும். இன்ஷா அல்லாஹ்.
இத்தனை ஆண்டுகள் நமதூரில் கிட்டத்தட்ட மன்னராட்சி முறை அமுலில் இருந்ததை போன்ற நிலை. மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. கடந்த நகராட்சித் தேர்தல் புதிய பரிமாற்றத்தை (transformation)- மக்களாட்சியை- நமதூரில் ஏற்படுத்தியுள்ளது.
ஊழலே நிர்வாகம் என்ற நிலை மாறி ஊழலற்ற நிர்வாகம் என்ற உறுதி பெருவாரியான - படித்த மக்களிடையே ஏற்பட்டு விட்டது. ஒருசிலரின் காலடியில் அதிகாரம் மண்டியிட்டுக் கிடந்த நிலை மாறி மக்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்குது. மக்கள் தங்கள் பிரதிநிதிகள் எவ்வாறு கடமையாற்றுகிறார்கள் என அறிய முற்படுகிறார்கள்.
வெளிப்படையான நிர்வாகம் இன்று உதயமாகியுள்ளது. மக்கள் கருத்துக்கு அஞ்சும் நிலை. மக்கள் நம்மை பற்றி என்ன நினைகிறார்கள்? அவர்களுக்கு நாம் நமது பதவி காலங்களில் என்னென்ன பணியாற்றினோம் என பட்டியலிடும் அவா. இவை நல்லவை இல்லையா?
புதிய அனுபவம் இது. இன்றைய குழப்ப நிலைக்கு இதுதான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. இந்த பரிமாற்றம் ஆரம்ப நிலையில் (initial stage) உள்ளதால் இந்த குழப்பம் சில காலம் நீடிக்கலாம். ஐந்தாண்டு கழியும் நிலையில் நாம் முதிர்ச்சி அடையலாம்- நம்மை நாம் தயார் படுத்திகொண்டால் - பொறுத்திருந்து பாப்போம்.
எனவே மக்களாகிய நாம் இதை நல்ல மாற்றத்திற்கான சந்தர்ப்பமாக மாற்ற முயற்சிக்கவேண்டும். இல்லையேல் மீண்டும் மன்னராட்சி முறையே அமுலுக்கு - ஒருசிலரின் கையில் அதிகாரம் என்ற நிலை - வந்துவிடும். ஜாக்கிரதை !! மீண்டும் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோம். விழலுக்கு இறைத்த நீராய் அனைத்தும் வீணாகிவிடும். அறிவார்ந்த மக்கள் விழிப்புணர்வு கொள்வர்.
தலைவர் சகோ. ஆபிதா மற்றும் சகோ. லுக்மான் அவர்களுக்கு ஒரு பொது வேண்டுகோள் ! பொது நலன் விரும்பும் தாங்கள், சில மாச்சரியங்களை - பிரச்சினைகளை - தன்முனைப்பு களைந்து- பரஸ்பரம் விட்டுகொடுத்து, இருவரும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். மக்கள் மன்றத்திற்கு வரும் முன் எவ்வகையான வாதங்கள் அவசியம் என்பதை உணர்ந்து வெளிப்படுத்துங்கள்.
தேவையற்ற வாதங்கள் என்னை போன்றோரை விரக்தி அடைய வைக்கும். இருவரும் கொள்கை பால் உறுதி மிக்கவர்கள். உங்களில் ஒருவருமோ அல்லது இருவருமோ தோல்வி கண்டால் நீங்கள் கொண்ட கொள்கைக்கு பின்னடைவு என்பதை அறியாதோரா நீங்கள் ?
அல்லாஹ்வுக்காக கேட்கிறேன் ! உங்கள் தன் முனைப்பை (ஈகோ) வை இருவரும் விட்டொழியுங்கள். இவ்வூரின் கடைக்கோடி ஏழை எழியோருக்காக கேட்கிறேன் ! உங்கள் மீது அளப்பரிய அன்பும் பாசமும் கொண்ட - நம்பி வாக்களித்த, உழைத்த, துஆ வேண்டிய - நல்ல உள்ளங்களின் சார்பாக கேட்கிறேன்!
தயவு செய்து நாலாந்தர லாவணி கச்சேரியை தவிர்த்து, உங்கள் சக்தியை மக்கள் நலனுக்காக செலவிடுங்கள்! உங்கள் இருவராலும் முடியும். மற்ற நல்ல உள்ளம் கொண்ட உறுப்பினர்களையும் இணைத்து, மிச்சம் இருக்கும் நாலாண்டு காலத்தை மக்களுக்கு நல்ல பணியாற்ற வேண்டுகிறேன்.
நண்பர்களே ! காயல் நல்லுள்ளங்களே ! உங்கள் கருத்துக்களும் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் டானிக்காக அமையட்டும். ஆதரவாக பேசுவதாக நினைத்து, உசுப்பேத்தி இருவரும் இவ்வேழ்வியில் மாண்டு விடாமல் காப்பாத்த வேண்டியது நமது கடமை. அல்லாஹ் அனைவரையும் - நமதூரையும் - காப்பற்றட்டும். அல்லாஹ் நாடினால்..
செய்தி: ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “இ.சி.ஜி. வல்லுநராக விரும்புகிறேன்...!” -மாநில சாதனை மாணவி செய்யித் அலீ ஃபாத்திமா ஆர்வம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: வாழ்த்துக்கள் சகோதரியே !! வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேரட்டும் !! posted byArabi Haja (Hong Kong)[22 May 2012] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 18991
அன்பு சகோதரியே !! கொடிது கொடிது வறுமை கொடிது !! அதனினும் கொடிது இளமையில் வறுமை, என்பார் ஆன்றோர் !! வறுமையை வென்று, உன் வாழ்வில் - அல்லாஹ்வின் நாட்டப்படி- வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேரட்டும் !! அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், உன்னை ஈன்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் மற்றும்
நீவிர் பெருமை பாடும் உம் பாட சாலையின் ஆசிரிய தாய்மாற்கும், சேரட்டும்!!
Re: மன்னடி வாழ் காயலர்க்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் !! posted byArabi Haja (Hong Kong)[08 November 2011] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 13050
சென்னை மன்னடி வாழ் காயலர்களை மாமூர் மஸ்ஜித்தில் ஒன்று கூடி காண்பதில் மிக்க மகிழ்ச்சி! எல்லோர்க்கும் அகம்கணிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் !!
கண்ணியத்திற்குரிய ஹலீம் ஹாஜியாரை முன்னிறுத்தி சூழ்திருப்பது மிக்க பொருத்தம்! மாண்புயர் அல்லாஹ், ஹாஜியார் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் அருளிட வேண்டுகிறேன்! அவர்களின் தொய்வில்லா சமுதாய பணி என்றும் போல் தொடர்ந்திட, நம்மோடு பல்லாண்டுகள் வாழ்ந்திட படைத்த இறையிடம் இறைஞ்சுகிறேன்!
எங்கள் மூசா ஹாஜி நமது சொந்தங்களோடு இணைந்து ஈத் தொழுகையை நிறைவு செய்தது நலம்!! இளவல் எஸ். எஸ். மாமூரில் தந்தையின் ( சம்சுதீன் ஹாஜியாரின்) இடத்தை பிடிக்க வாழ்த்துகிறேன் !!
பொருள் : தீமையை பரவலாக்கும் அபாயம் !! posted byArabi Haja (Hong Kong)[31 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12639
தம்பி சாளை பஷீர் பதிவு செய்துள்ள கருத்தை நானும் ஆதரிக்கிறேன். நமதூரில் ஒரு ஊழல் கண்காணிப்பு குழு (Watch Dog அமைப்பு) உருவாக்கப்பட வேண்டும். அது நகராட்சி நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அரசின் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடையும் வழிமுறைகளை கண்காணிக்க வேண்டும்.
சென்ற முறை 'அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில்' ஒதுக்கப்பட்ட நிதி முறையாக மக்கள் (குறிப்பாக ஏழை எளிய மக்கள்) நல திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல், மன்ற உறுப்பினர்களும், ஆண்ட (தி. மு. க ) கட்சி நகர நிர்வாகிகளும் பிரித்து பங்கு போட்டதை, ஐயா. திருத்துவ ராஜ் அவர்கள் ஐ. ஐ. எம். நடாத்திய 'நகராட்சி நிர்வாகம்- ஒரு அலசல் இல் வேதனையுடன் வெளிப்படுத்தியதை நாம் அனைவரும் கேட்டோம்.
இங்கே சில விவரம் தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்யும் சில பரிதாபத்திற்குரிய சகோதரர்கள், அரைத்ததை அரைப்பதாக எழுதுவது, ஆலோசனை கூறுவதும் ஏற்புடையதல்ல.
இந்த தீமை உங்கள் வீடுகளை, மக்களை சூழும் வரை உங்களுக்கு கவலை இல்லை. ஆனால் சமூக பிரஞ்சை உள்ளோர் இதை நாளைய தலைமுறையை சீரழிக்கும் காரணியாக பார்ப்பர்.
டாக்டர் கே.வீ. எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள், தீமையை இனம் காணுவதும், அதை தீமைதான் என்று மக்களிடம் அடிக்கடி வலியுறுத்தி புரியவைப்பதும், தீமையை தடுப்பதற்கான முதல் காரணி என்பார். அதை செய்ய தவறுமேயானால் மக்கள் தீமைக்கு பழக்கப்பட்டு அதை ஏற்கும் மனோநிலைக்கு வந்து விடுவர் என்பார். இது 'நஹ்யு அணில் முன்கரி' (தீமையை தடுத்து நிறுத்துவதி) ன் முக்கிய படித்தரம் என்பார்.
இதுதான் இன்றும் இந்த ஊரில் நடக்கிறது. தம்பி குளம் ஷுஐபும் 'இதுதான் நேற்றும் (காதிரிக்கு)நடந்தது. இன்றும் நடந்துள்ளது. என்கிறார். இந்த தீமையை- நன்மை என- ஏற்போமா ? நடக்க அனுமதித்து விடுவோமா ?
இந்த வலைய தல நண்பர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். காரணம் அவர்கள் நகரில் அரங்கேறும் பல நிகழ்வுகளை மக்கள் பார்வைக்கும் அவர்களின் கருத்திற்கும் துணிந்து அனுமதிக்கின்றனர். இது தீமையை நாடுவோரை, அதை துணிந்து செய்வதை தடுக்கும் வழி முறை.
எங்களில் 'யாருக்கும் வெட்கமில்லை' என்றும் 'ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?' எனும் மனோ நிலையை உருவாக்க முற்படுவோமேயானால், நமது அடுத்த தலைமுறை நம்மை நிச்சயம் மன்னிக்காது.
எனவே தயவு செய்து இந்த வலைய தளத்தில் தீமையை அழிக்கும் ஆலோசனைகளை பதியும் சகோதர்களை உற்சாகப்படுத்தாவிட்டலும் பரவாயில்லை - உதாசீனப்படுத்தாதீர்.
இந்த ஊருக்கு அடிப்படை பள்ளி கல்வியை ஆண் பெண் பாலாறுக்கு அளிக்கவும், ஊருக்கு குடிநீர் திட்டத்தை கொண்டுவரவும், பள்ளிவாயில்கள் கட்டவும், இன்னும் ஊருக்கு நல்ல பல நன்மைகளை நிறைவேற்ற தங்கள் பொருளை அள்ளித்தந்த ஒரு கண்ணிய மிக்க வணிக குழுமம், இன்று அந்த குடும்பத்தில் தோன்றிய சில [edited] கண்ணியம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி தீமைக்கு பகிரங்கமாக வாரி இறைக்கப்படுகிறது. இது இதை நிறுவிய அந்த பெரியவர்களுக்கு செய்யும் மாபெரும் அநீதி. இனியும் இதை விட்டு வைக்காமல், தடுத்து நிறுத்த அந்த குடும்பத்தார் முன்வரவேண்டும் என்பதை என் வேண்டு கோளாக வைக்க விரும்புகிறேன்.
எது எப்படியாயினும், காயல்.காம் உண்மையை வெளிக்கொணர்வதில் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டாம்.
பொருள் : தீமைக்கு எதிரான போர் என்றும் முடிவை எட்டுவதில்லை !! posted byArabi Haja (Hong Kong )[30 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12588
மீண்டும் அரங்கேறியிருக்கிறது அசிங்கம். நகர சபை தலைவிக்கு மீண்டும் சவால்!! கையூட்டும், ஊழலும் அவரது நிர்வாகத்துக்கு பெரிய சவாலாகவே இருக்கும். மக்களால் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்ட ஒரு மாபெரும் சக்தி மீண்டும் விஸ்வரூபம் எடுத்து கொல்லை வழியாக அவரை விரட்ட பெரும் முயற்சி செய்யும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
'விலைமதிக்க முடியாத' 14 வாக்குகள் பெறப்பட்டு சகோ. மும்பை மைதீன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் நம்மை காயலர்களாக தலைகுனிய வைத்த நிகழ்வு இது. ஊடகங்களும் மக்களும் கண்ணில் வெண்ணையை ஊற்றி விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் 'இந்த சக்தி இந்த ஊரை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்' என அனைத்து வாசகர்களும் உறுதி பூண்டால் இதை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்க முடியும் அல்லாஹ் நாடினால். அவனிடமே உதவி கோருவோம்.
இந்த 14 உறுப்பினர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட அதிகமான பெருவாரி வாக்குகள் பெற்று சகோ. ஆபிதா அவர்கள் மக்கள் மன்றத்தால் தேர்வு செய்யபெற்றாள் என்பதை இவர்கள் உணரவேண்டும். மக்கள் தீர்ப்புக்கு எதிராக யாரும் அரசாள நினைத்தால் ?? மக்கள் மன்றம் சும்மா விடாது என்பதை நாம் இவர்களுக்கு தெளிவு படுத்தும் நேரம் இது.
இந்த ஊரில் ஆளும் அ.தி.மு. க. என்ற கட்சி எங்கே ? யாரவது தேடி பாருங்களேன்!
கவிஞர் கண்ணதாசன் ' இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மாபெரும் சக்தி. ஆனால் பரிதாபம் என்னவெனில் அதற்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் போனதுதான்' என்று சொன்னது தான் இங்கு நினைவுகூரத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross