காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் சென்னையில் நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்ற நோன்புப் பெருநாளன்று (09-08-2013) KCGC –யால் திடீரென அறிவிக்கப்பட்ட அழைப்பின் பெயரில் சென்னை மெரீனா பீச்சின் ஒரு பகுதியான காந்திபீச்சில் அன்று மாலையில் சென்னை வாழ் காயலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டது
நினைவிருக்கலாம்.
அதன் தொடர்ச்சியாக முன்னதாக அறிவிக்கப்பட்ட தகவலடிப்படையில் சென்னை மெரினாவில் கே.சி.ஜி.சி.யின் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் 16.10.2013 புதன்கிழமையன்று காயலர்களின் குடும்ப சங்கமத்துடனும் மகிழ்ச்சிப் பரவசத்துடனும் இனிதே
நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மாலை 5.00 மணிக்கு விவேகானந்தர் இல்லம் எதிரில் கூடுவதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து 5.45 மணிமுதல் ஒவ்வொருவராக வரத்துவங்கினர். மக்ரிபுக்குப் பின் குடும்ப சகிதமாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
சுமார் 175 பேருக்கும் மேலாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களும் சிறு இடைவெளியில் தனித்தனியாக அமர்ந்து கொண்டனர்.
KCGC –ன் ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்த பஃப்ஸ் மற்றும் குளிர்பானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஒன்றுகூடலுக்கு வந்திருந்தோர் அனைவரும் தத்தமது உறவுகளையும் நட்புகளையும் பார்த்த மகிழ்ச்சியில் குழுக்குழுவாக அமர்ந்து
உரையாடத்துவங்கினர்.
பெண்கள் பகுதியில் கூட்டம் களைகட்டத் துவங்கியது. நீண்ட நாள் இடைவேளைக்குப் பின் மீண்டும் தங்களின் உரவுகளையும் நட்புகளையும் சந்தித்த மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களின் விசாரிப்புகளும் இரவு 9.00 மணிவரை நீண்டது.
குழந்தைகளும் அவர்களின் வயதினரோடு நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும் சிற்றுண்டிகளைப் பரிமாறுவதில் இவ்விளம்பிஞ்சுகள் சளைக்காமல் உதவியும் செய்தனர்.
ஆண்கள் பகுதியில் இஷா தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து KCGC –ன் ஏற்பாட்டில் குழுப்படங்கள் எடுக்கப்பட்டன.
பின்னர் இரவு 9.00 மணிக்குப் பிறகு ஒவ்வொருவராக தத்தமது இல்லம் நோக்கித் திரும்பிச் சென்றனர்.
1. Re:...தமிழ் மணக்கும் சோலை எல்லாம்,, posted bymackie noohuthambi (colombo)[18 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30845
தமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவை எல்லாம் அலையவிட்டேன் கண்ணை எங்கு சென்றாலும் காயலர்கள் கூடியிருக்கும் கூட்டமாக அது இருந்ததை கண்டு மனம் குளிர்ந்தேன். பெருநாள் வந்ததும் வந்தது, நமதூர் இனைய தளங்கள் நிலைப்படங்களாக உலகம் முழுவதும் உள்ள காயலர்களை பல கோணங்களில் படம் பிடித்து காட்டுகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் மனிதனாக கால் எடுத்து வைத்தோம் என்ற பெருமையுடன் உள்ளே சென்றானாம். அங்கு மஞ்ச வாடா, கஞ்சி என்று ஒருவன் கூறி விற்றுக் கொண்டு சென்றானாம், அருகில் போய் விசாரித்தபோது அது ஒரு காயல்பட்டினத்து ஆள் என்று கேட்டு தெரிந்ததும் அசந்து விட்டானாம். கற்பனையாக சொல்லப்பட்ட கதை என்றாலும் அதை உண்மைபடுத்தும் விதமாக இந்த திருநாள் அமைந்திருப்பது மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.
என்னதான் வேற்றுமைகள் ஊரில் பேசிக் கொண்டாலும் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது வெளிநாடுகளில்.ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் இங்கு வந்து புகல் என்ன நீதி. வாழ்க காயலர் பண்பாடு.
4. Re:..தன் கருத்து பதிவுகளில் நல்ல தமிழ் மணம் கலந்து தரும் மக்கியார், சில நேரம்...... posted byHaja Arabi (Hong Kong)[18 October 2013] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 30853
தன் கருத்து பதிவுகளில் நல்ல தமிழ் மணம் கலந்து தரும் மக்கியார், சில நேரம் சொற்பிழையோடு தருவதும் மக்கியாரின் தமிழ் அழகே அழகு!
இந்த கவி வரி
'தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை!
சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை!
என்று வரைய வேண்டும்.
இசை முரசின் கம்பீர குரலில் வெளிப்பட்ட இந்த கவி வரிகள், தன் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்காக கலைஞரின் கைவண்ணம் என்பர்.
5. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[20 October 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 30864
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் மக்களின் இது போன்ற இந்த ஓன்று கூடல் தேவையானது தான் ......அப்போது தான் நமது மக்களிடம் ஒரு பாசம் ......நமது ஊருக்கான ஒரு நேசம் .....ஒரு பிடிப்பினை வரும் .....
இந்த சிறப்பான நல் நாளில் நம்மை படைத்த வல்ல இறைவன் ...நம் ஊர் அனைத்து மக்களிடமும் ஒற்றுமை என்கிற ..... பாசமெனும் அன்பையும் ....ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழுகின்ற நல்ல உள்ளத்தையும் .....நல்ல என்னைதையும் கொடுத்தருள்வானகவும் ஆமீன்...
உலகம் பூராவும் நமது ஊர் அனைத்து மக்களிடமும் இப்படி ஒரு ஒற்றுமை என்கிற அன்பு மென்மேலும் வளர்ந்து வருவதை நம் மனதில் நினைக்கும் போதே ....நம் உள்ளம் பூரிப்பு அடைகிறது ...அல்லாஹ் மென்மேலும் சிறப்பாக்கி அருள் வானகவும் ஆமீன் ....
>>>>உலகம் பூராவும் இருக்கின்ற நமது ஊர் அனைத்து மக்களுக்கும் ....எங்களின் இனிய ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்களை மனதார கூறி ....நம் மக்கள் யாவர்களும் பல சிறப்புகள் பெற்று நீடித்த ஆயுளுடன் வாழ்ந்து வரவும் வல்ல இறைவன் அருள் புரிவானகவும் ஆமீன் ....
என் அருமை மச்சினன் .S.S.ஷேக் தாவூத் அவர்களை இந்த ஓன்று கூடல் நிழல் படத்தில் பார்த்ததில் மற்றற்ற மன மகிழ்ச்சியானேன்..... வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
SADIKKAI STREET
KAYALPATNAM .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross