காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 20.10.2013 அன்று 14.50 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் அக்டோபர் 18ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. DCW வுக்கு ஆப்பு ரெடி...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[21 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30872
நாள்தோறும் சளைக்காமல் வெளியூருக்குப் போனால் கூட இன்னைக்கு தயவு செஞ்சு கடல் காட்சியெ படம் எடுத்துடுங்கன்னு நண்பர்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு போகும் செய்தியாளர் எஸ்.கே. சாலிஹ் அவரது பொறுப்புணர்வுக்கு கிடைத்த வெற்றிதான் இன்றைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியினரே வந்து நம்ம கடல் காட்சியை வீடியோ பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்றிரவு 9:00 மணிக்கு ஒருதரம் புதிய தலைமுறை டிவியில் DCW வின் கயமத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல ஊடகங்கள் படையெடுத்து வரும். கழிவு நீர் கடலில் கலக்காமல் எமது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் வரும்வரை பாதிப்புக்குள்ளான எமதூர் மக்கள் ஓய மாட்டாகள்.
2. நமக்கும் நம் தலைமுறைக்கும் உட்பட்டது... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30895
மழை காலம் ஆரம்பமாகி விட்டது இனி தான் அதிகமான இரசாயன கழிவுகளை இந்த கடலில் கலந்து விட ஆயத்தமாக இருப்பார்கள்....!
இனி தான் நாம் அனைவர்களும் ஒற்றுமையாக மிக தெளிவாக இருந்து இந்த நாசக்கார DCW வின் இரசாயன கழிவுகளை நம் மண்ணில் கலக்க விடாமல் முறியடிக்க வேண்டும்.. முழுமையாக செயல் படவேண்டும்...!
இந்த முறியடிப்பு யாருக்கோ அல்ல...! நமக்கும் நம் தலைமுறைக்கும் உட்பட்டது என்பதனை மனதில் பதிய வேண்டும்...! மறந்து விடக்கூடாது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross