சஊதி அரபிய்யாவில் இம்மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, அந்நாட்டின் தலைநகர் ரியாதில் வசிக்கும் காயலர்கள், தம்மாம் நகரில் வசிக்கும் காயலர்களுடன் இணைந்து பெருநாள் கொண்டாடுவதற்காக அங்கு புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு, அதிகாலையில் பெருநாள் தொழுகையை அனைவரும் நிறைவேற்றினர். பின்னர், அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறி, கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் இணைந்தமர்ந்து பெருநாள் உணவுண்டனர். எல்லோரும் இணைந்து சிக்கன் பார்பிக்யூ எனும் சூட்டுக்கறி தயாரித்து, போட்டி போட்டுக்கொண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.
பின்பு, பாலைவன மணலில் சாகசத்திற்காக ஓட்டப்படும் கார் வாகனத்தை அனைவரும் ஓட்டி சாகசம் புரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சஊதி அரபிய்யா நாட்டு குடிமக்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படியான இரவுணவு விருந்துடன் ரியாத் - தம்மாம் காயலர்களின் பெருநாள் கொண்டாட்டம் நிறைவுற்றது.
சஊதி அரபிய்யா தம்மாமிலிருந்து...
தகவல் & படங்கள்:
முத்துவாப்பா |