ஹாங்காங் நாட்டில், இம்மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அன்று காலையில், ஹாங்காங் கவ்லூனிலுள்ள கவ்லூன் பள்ளியில் பெருநாள் தொழுகை 3 விடுத்தங்களாக நிறைவேற்றப்பட்டது. கடைசியாக நடைபெற்ற தொழுகையை, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் வழிநடத்தி, குத்பா பேருரையும் நிகழ்த்தினார்.
இத்தொழுகைகளில், நூற்றுக்கணக்கான காயலர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர் அவர்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
படங்கள்:
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433), ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |