ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், இம்மாதம் 16ஆம் தேதி புதன்கிழமையன்று காலை 09.45 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல் அமானுல்லாஹ், காங்கிரஸ் பிரமுகர் காயல் முத்துவாப்பா, திருவனந்தபுரம் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எம்.ஐ.ஷேக் தாவூத், ஹாஃபிழ் ஜெ.ஏ.ஸதக்கத்துல்லாஹ், மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின்,
மார்க்க அறிஞர்களான - மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஹ்யித்தீன் மஸ்லஹீ,
பெங்களூரு காயல் நலமன்ற செயற்குழு உறுப்பினர் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான், ஜித்தா காயல் நற்பணி மன்ற அங்கத்தினரான ஹாஜி எம்.என்.சுல்தான் அப்துல் காதிர் (யான்பு), ஹாஜி நூர் முஹம்மத் ஜக்கரிய்யா (ஜித்தா),
காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மலபார் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த ஹாஜி சாமு ஷிஹாபுத்தீன்,
நகரப் பிரமுகர்களான கானாப்பா ஸாலிஹ் ஹாஜி, கம்பல்பக்ஷ் மொகுதூம் முஹம்மத், முத்துச்சுடர் ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக், மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத், நகரின் மூத்த பிரமுகர் ஹாஜி சொளுக்கு யூஸுஃப் ஸாஹிப் என்ற சாபு, கவிஞர் நெய்னா உள்ளிட்டோரும், ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் வந்துள்ள ஏராளமான பொதுமக்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்.
பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில், அதன் முத்தவல்லி ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஜமாஅத்தார் அனைவரும் ஒன்றுகூடி, முஸாஃபஹா - கைலாகு செய்து, கட்டித் தழுவி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும் - வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
நிகழ்ச்சிகளின் நிறைவில், அனைவரும் கூட்டங்கூட்டமாக குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
பின்னர், தொழுகையை வழிநடத்தி குத்பா பேருரை நிகழ்த்திய கத்தீப் - முரசு (டங்கா) முழங்க, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பைத் பிரிவு மாணவர்களால் பைத் பாடப்பட்டவாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
மஹான் ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத் செய்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
[மேலேயுள்ள குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!] |