இலங்கையில் இம்மாதம் 16ஆம் தேதி புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, அந்நாட்டின் தலைநகர் கொழும்புவிலுள்ள கோட்டை (பெட்டா) மற்றும் கொல்லுப்பிட்டிய பகுதிகளிலுள்ள ஜும்ஆ மஸ்ஜித்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரையில், கொழும்பு நகரில் வசிக்கும் காயலர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில், அனைத்து காயலர்களுக்கும் பெருநாள் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
2. Re:...பெருநாள் வாழ்த்துக்கள் posted bymackie noohuthambi (colombo)[18 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30843
இலங்கையில் வாழ்வது ஒரு சுகம். அதுவும் நம்மவர்களுடன் கலந்து வாழ்வது இன்னொரு சுகம். பெருநாளில் உறவுகள் இல்லாமல் ஊர் நண்பர்களையே உறவாக நினைத்து பார்த்து மகிழ்ந்து அவர்களுடன் உறவாடி உணவருந்தி வாழ்வது இன்னும் சுகம்.
"நேற்றிரவு நல்ல சுகமா, இன்றிரவு இன்னும் சுகமா சொர்க்கமே சுகமா, சுகமே சுகமா" என்ற வைரமுத்துவின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன.
விருந்தளித்து கௌரவித்தவர்களுக்கு நன்றி.இந்த நாள் இனிய நாள்.
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்போர் நல் விருந்து வானத்தவர்க்கு என்று வள்ளுவம் சொல்கிறது. இது போல் என்றும் நாம் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross