இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 8ஆம் மாத கலந்துரையாடல் அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் புதுப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் ரிஸ்வான் சதுக்கை (அரசு நூலகம்) அருகில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 8ஆம் கலந்துரையாடல் நடைபெற்றது.
வருகை புரிந்த இலக்கிய பிரியர்களை இதன் அமைப்பாளர் ALS இப்னு அப்பாஸ் வரவேற்றார்கள். முதலில் பேசிய M.L. முஹம்மது ஹசன் அவர்கள் 11/10/2013 தி இந்து நாளிதழின் அந்த நாள் ஞாபகம் பகுதியிலிருந்து 1604 ஆண்டு பெரும் நட்சத்திர வெடிப்பு பார்க்கப்பட்ட நாள் என்றும், பால் வெளி என்கிற கேலக்ஸி பிரபஞ்சத்தில் உள்ளது. அவை பிறந்து வளர்ந்து இருக்கிறது. 1604ல் முதல் முதலாக பார்க்கப்பட்ட 20 ஆயிரம் ஒளி வருடத்தூரத்தில் இருந்தது என்றும் அது பற்றி ஏராளமான செய்திகளை அவர்கள் எடுத்து வைத்தார்கள். மேலும், முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் கல்லூரியிலிருந்து ஜூலை 2012ல் வெளியிட்ட சுவனமலர் கவிதைத்தொகுப்பு நூல் காயல் நகர பெண் கவிஞரான S.M.A. ஹைருன்னிஷா முஅஷ்கரிய்யா அவர்களின் நூலிலிருந்து சில கவிதைகளை ... என்னுள் உரைபவனுக்கு, பேராற்றலின் சொந்தக்காரன், ஹைக்கூ கவிதைகளை படித்துக் காண்பித்தார்கள். ரூபாய்50 மதிப்புள்ள நமதூர் பெண் கவிதையாலரின் கவி நடையை சபை சார்பில் பாராட்டினார்கள்.
அடுத்து L.T. இப்ராஹீம் அவர்கள் பேசும்போது, கருத்தரித்ததெல்லாம் பிள்ளை அல்ல, கருத்தை அறிந்து நடப்பவனே பிள்ளை ஆகிறான் என்று படித்த கவிதையை ஞாபகப்படுத்தினார். மேலும், அழுகை என்ற தலைப்பில் - தாய்பாலுக்காக அழுகிறான் 3 வயது வரை, படிப்பிற்காக அழுகிறான் 18 வயது வரை, காதலிக்காக அழுகிறான் 24வயது வரை, வேலைக்காக அழுகிறான் 28வயது வரை, குடும்பத்திற்காக அழுகிறான். 50 வயது வரை, கடைசியாக நோய்க்காக அழுகிறான் சாகும் வரை. இதனால் சிரிப்பதற்கு ஏது நேரம்? என்று கூறினார்.
அடுத்து பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் V.M. மீரான் பேசும் போது, இப்போது சைவ முட்டைகள் வந்து விட்டது. இன்றுள்ள முட்டையில் சத்து 55 சதவிகிதம் எனக் கணக்கிடப்படுவதாகவும், ஏற்காடு சரவணன் என்பவர் சிறிய அளவில் துவங்கிய ஊனமுற்றோருக்கான உதவி நிலையம் இன்று பெரிதாக வளர்ந்திருப்பதாகவும் கூறி முடித்தார்.
புதிய விருந்தினராக மக்தூம் தெரு, S.L. முஹம்மது அரசத், குத்துக்கள் தெரு மக்தூம் இப்திஹார் என்ற இளைஞர்களும் வந்திருந்தனர். மக்ரிப் பாங்கு சொன்னதும் இம்மன்றம் இறையருளால் நிறைவு பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
V.M. மீரான் (B.E. இரண்டாம் ஆண்டு) |