காயல்பட்டினம் துளிர் சிறப்பு பள்ளியில் உலக மன நாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து அப்பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கடந்த அக்டோபர் 10, 2013 அன்று உலக மன நாள் (WORLD MENTAL HEALTH DAY) விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு துளிரின் மறு வாழ்வு திட்டப்பணிகள் துறை தலைவரும், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கத்தின் கெளரவ செயாலாளருமான ஏ. வஹீதா அவர்கள் தலைமையேற்றார். துளிரின் செயலர் M.L. சேக்னா லெப்பை மற்றும் காயல்பட்டணம் குடும்ப நல மருத்துவர் ஜாஃபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பாசிரியை ஹலீமா இறைமறை ஒதினார். துளிரின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரி சித்தி ரம்ஜான் அனைவரையும் வரவேற்றதோடு, உலக மன நாள் துளிரில் கொண்டாடப்படுவதன் அவசியம் பற்றி பேசினார்.
மருத்துவர் ஜாஃபர சாதிக், உடல் நலத்திற்கு மன நலம் அவசியம் எனவும், மன நலம் பேண உடல் நலம் பேண வேண்டும் என்றும், உடல் நலத்திற்கு ஆரோக்கியமான உணவு முறைகள் அவசியம் என்றும் பேசினார்.
மன நல மருத்துவர் சிவசைலம் இன்றைய காலகட்டத்தில் மன நலம் பாதிக்கப்படும் இளைஞர்கள், யுவதிகளின் பிரச்சனைகள் பற்றியும், குழந்தைகள், பெற்றோர்களுக்கு ஏற்படும் பரபரப்பு உலகின் மன அழுதப்பிரச்சனைகள் பற்றியும், சிறப்பு குழந்தைகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு அன்றாடம் ஏற்படும் மன இறுக்கம் பற்றியும் அவை அனைத்திற்கான தீர்வு பற்றியும் மன நல மருத்துவ கண்ணோட்டத்தில் பேசினார்.
கலந்துகொண்டோரின் மன நல சம்மந்தமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மன நல மருத்துவர் சிவசைலம் பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மன நலன்களை விளக்கி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர்.
துளிர் குழந்தைகளின் பெற்றோர்களும், அவர்தம் உறவினர்களும், துளிரின் சிறப்பாசிரியியர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும், துளிர் நிறுவனர் வழக்கறிஞர் அஹ்மத் அவர்கள் ஆலோசனை பெயரில் நடைபெறுகிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:00 pm / 18.10.2013] |