காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 18.10.2013 அன்று 10.35 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் அக்டோபர் 17ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. தன் சகோதரரின் ரத்தத்தின் இருந்து கொள்ளையடித்த பணத்தையோ - பொருளையோ இன்னும் பிற வசதி வாய்ப்புகளையோ பெற விரும்பாதவர்கள் எங்களின் இந்த சகோதரர்கள்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30897
உங்களின் அன்றாட பணிகளையும் சிறு நேரம் ஒதுக்கி தினமும் கடலை கண்காணித்து வரும் அன்பு சகோதரர்களுக்கு எப்படி நன்றி சொல்ல போவது என்று எனக்கு வாயில் வார்த்தைகள் வருவது இல்லை...! உள்ளத்தால் வல்ல இறைவனிடம் இந்த சகோதரர்களுக்காக துவா செய்கின்றோம்...
DCW வின் PRO மற்றும் உயர் அதிகாரிகள் உங்களிடம் பேச விரும்புகிறார் வாருங்கள் என்று எத்தனை எத்தனை அழைப்புக்கள் வந்த போதிலும் இந்த சகோதரர்கள் அதை ஏற்க மறுத்தார்கள்.. மக்களின் கோரிக்கையை நீ (DCW) ஏற்று கொள்ளாத வரை (DCW) உன்னிடம் பேச்சு வார்த்தைக்கு எங்களிடம் இடமில்லை... நேரமில்லை.. என்று பலமுறை சொல்லியும் மேலும் மேலும் இந்த சகோதரர்களை அழைக்கும் நோக்கம் தான் என்ன...?
உனது எலும்பு துண்டுக்கு ஆசை படுகிறவர்கள் இவர்கள் அல்ல... பட்டினி கிடந்து வறுமையில் செத்தாலும் தன் சகோதரரின் சாவுகளில் இருந்து - தன் சகோதரரின் ரத்தத்தின் இருந்து கொள்ளையடித்த பணத்தையோ - பொருளையோ இன்னும் பிற வசதி வாய்ப்புகளையோ பெற விரும்பாதவர்கள் எங்களின் இந்த சகோதரர்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross