காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், அழைப்புப் பணிக்கான - Batch 3 பயிற்சி வகுப்பு விரைவில் துவக்கப்படவுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.
அற்புதத்தைச் சொல்ல ஓர் அற்புத வாய்ப்பு
--------------------------------------------------------------------
இஸ்லாம் மார்க்கம் சொல்லும் இனிய வாழ்வியல் நெறியை முஸ்லிமல்லாத மக்களுக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை அறியாமல் கவலைப்படுபவரா நீங்கள்?
இஸ்லாமிய அழைப்பு (தஃவா) பணி செய்ய ஆர்வமுள்ளவரா நீங்கள்?
முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாம் தொடர்பாக எழுப்பும் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தெரியாமல் தடுமாறுபவரா நீங்கள்?
எது எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும்...
கவலையை விடுங்கள்!
இதோ உங்களுக்காகவே நமது தஃவா சென்டர், Batch- 3 தஃவா பயிற்சி வகுப்பை தொடங்க இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.
இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்ற இந்த தஃவா பயிற்சியில், 30க்கும் அதிகமானவர்கள் தாஈகளாகப் பயிற்சி பெற்றுள்ளனர். அல்ஹ்மதுலில்லாஹ்.
இப்பயிற்சியில் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், சுயதொழில் செய்வோர் என பலரும் கலந்து பயிற்சி பெற்ற பின், தம்முடன் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என பலருக்கும் தஃவா பணியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
இது தொடர்பான வீடியோ தொகுப்பை, https://www.youtube.com/watch?feature=player_embedded&v=KtHwQLxE-qE என்ற இணையதள பக்கத்தில் காணலாம்.
மேலும் விபரங்களுக்கு.....
ஆண்கள்: 99769 37955, 78458 56678, 91504 48312
பெண்கள்:04639 283244
Batch 3 பயிற்சி வகுப்பு குறித்த முழு விபரங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |