காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக, “புதிய தலைமுறை” தொலைக்காட்சி சார்பில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக, நேற்று (அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை) அத்தொலைக்காட்சியின் செய்தியாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நிர்வாகிகள், காயல்பட்டினம் கடையக்குடியைச் சேர்ந்த மீனவர்கள், ஆறுமுகநேரி உப்பளத் தொழிலாளர்கள் உட்பட பலரிடம் பேட்டி எடுத்த்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, “புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |