தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும்) விதிகள், 1997-ன் படி, தமிழ்நாடு வக்ஃப் வாரிய பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரிவுகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்கண்ட பிரிவு முஸ்லிம் உறுப்பினர்களின் பட்டியல் பெறப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (10.05.2013) தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், அனைத்து மண்டல கண்காணிப்பாளர்கள் (வக்ஃப்) அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு பலகைகளில்
வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர தகுதியுள்ள எந்தவொரு நபராவது தங்களின் பெயர் சேர்க்கப்பட்டது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பாக ஆட்சேபணையிருந்தால் அவர்கள் தங்களின் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகளை, இவ்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட
ஒரு வார காலத்திற்குள் அதாவது 16.05.2013 மாலை 6.00 மணிக்குள் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு பெறப்படும் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகள் மீது தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவார்.
3. தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி, தேர்தல் அறிவிப்பை தனியாக தமிழ் நாடு அரசிதழில் விரைவில் வெளியிடுவார்.
தங்க கலியபெருமாள்,
தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர்,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
|