Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:58:15 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10777
#KOTW10777
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 10, 2013
புகாரிஷ் ஷரீஃப் 1434: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3601 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.

காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமீர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் திக்ர் மஜ்லிஸுக்கு தலைமை தாங்கினார். ஹாஃபிழ் அப்துல் காதிர் வாஃபிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

முதல் நாள் சொற்பொழிவு 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. நாளை அதிகாலை அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் முதல் நாள் பாடம் ஓதப்பட்டு, காலை 09.00 மணிக்கு அதற்கான விளக்கவுரை வழங்கப்படுகிறது.

‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துவக்க நாளன்று சொற்பொழிவாற்றுகிறார்.

வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன. மறுநாள் 11.06.2012 அன்று அதிகாலையில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்படவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ்ஃப் ஸபை வைபவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 85ஆம் ஆண்டு 30 நாட்களில் நடைபெறும் சொற்பொழிவுகள் அந்நிர்வாகத்தின் சார்பில் அதன் http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.

இவ்வாண்டு நிகழ்முறை குறித்து மஜ்லிஸ் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by kulam.kabeer (chennai) [11 May 2013]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 27367

அஸ்ஸலாமு அழைக்கும்

நமது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் யாவும் தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பான முறையில் நடந்து முடிந்தேற வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நனி சிறக்க வாழ்த்துகிறேன்
posted by S.A. SALMAN FARIS (YANBU ( SAUDI ARABIA )) [11 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27369

"அரசாட்சி தனதாக்கி
அதன் சாட்சி நபியாக்கி
அழகாட்சி புரிகின்ற "
வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
அல்ஹம்துலில்லாஹ் !

மக்கதில் பிறந்து மதீனத்தில் வாழும் மன்னர் மஹ்மூது நபி(ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம்)அவர்களின் பொன் மொழிகளை அதபுடன் ஓதும்

மாண்புயர் மாமன்றம் புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் யாவும்

வல்ல அல்லாஹ்வின் அருளாலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்களின் துஆ பரகத்துடன்

அரம்பம் முதல் கடைசி வரை நனி சிறப்பான முறையில் நிறைவு பெற வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !!!! ஆமீன்

இப்படிக்கு

எஸ் எ சல்மான் ஃபாரிஸ்
யான்பு
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வாழ்த்துக்கள்...இனிதே துவங்கட்டும் இணை இல்லா மாமன்றம்...!!
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [11 May 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27370

அகிலத்தார்க் கெல்லாம் அருட்க் கொடையாம் அண்ணலம் பெருமானார் (சல்லல்லாஹுஅலைஹி வசல்லம்)அவர்களின் அமுத திருவாய் மொழிகளின் கேந்திரமாம் புனித மஜ்லிசுல் புஹாரிச்ஷரீப் சபை யின் 86 ஆம் ஆண்டு நிகழ்வுகள் நாளை இனிதே துங்குவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.

இன்ஷா allah இந்த ஒருமாத நிகழ்சிகள் மூலம் நமதூர் மக்களுக்கும்,நமதூருக்கும் இன்னும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எல்லாம் வல்ல அல்லா ஈருலகிலும் பேரருள் புரிவானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [11 May 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 27375

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது '' புகாரிஷ் ஷரீஃப் '''' சபையின் அனைத்து வைபவங்களும் ......எல்லா நாட்களும் .......வல்ல இறைவன் அருளாள் மிக சிறப்பாக நடக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI.

JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [11 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27385

மாநபியின் மாமன்றம் மஜ்லிஸ் புஹாரி ஷரீப் மன்றின் 86 ஆம் ஆண்டு வைபவம் யாவும் வல்லவன் அல்லாஹ்வின் நல்லருளால் நனி சிறப்போடு நடைபெற இறைஞ்சுகிறேன்.காயல் நகர கண்மணிகளுக்கு மாநபியின் மணி மொழிகளின் வியாக்கியானம் தெள்ள தெளிவாக அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. கோடை கால விடுமுறை யாதலால் தாய்மார்கள் தெளிவான மார்க்க சட்டங்கள் தெரிந்து கொள்ள நல்ல சந்தர்பம். கிடைக்கும் நல்ல நேரத்தை பயன் படுத்தி கொள்ள நல்ல வாய்ப்பு. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மக்கள் யாவருக்கும் நல்ல வாய்ப்பை பயன் படுத்தும் தவ்பீக்கை தந்தருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. புனித மஜ்ளிசின் சேவை சிறக்கட்டுமாக !
posted by Moulavi .Hafil M.S.Kaja Mohideen Mahlari (Kayalpattanam.) [12 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27390

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது '' புகாரிஷ் ஷரீஃப் '''' சபையின் அனைத்து வைபவங்களும் ......எல்லா நாட்களும் .......வல்ல இறைவன் அருளாள் மிக சிறப்பாக நடக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

பூமான் நபி (ஸல் ) அவர்களின் புனித மனிமொலிகளை கேட்டு, விளங்கி, நமது வாழ்வில் அதனை செயல் படுத்தி நல்லோர்கள் கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved