காயல்பட்டினம் கடையக்குடி கடலோரத்தில், சுமார் 35 அடி நீளம் கொண்ட ராட்சத மீன் மே 10ஆம் தேதி (நேற்று) மதியம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
‘செல்லப்பிள்ளை’ என்ற பெயருடைய மீன் இனத்தின் குட்டி மீனான இது, சுமார் 35 அடி நீளமும், 10 அடி அகலமும், 2.5 டன் எடையும் கொண்டது. இதுவே பெரிய மீனாக இருந்தால், சுமார் 10 டன் வரை எடை இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் கரையொதுங்கிய செய்தி இன்றுதான் அப்பகுதி மக்களுக்கு பரவலாக தெரியத் துவங்கியது. அதனையடுத்து, அவர்கள் தம் குழந்தைகளுடன் வந்து மீனைப் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
‘செல்லப்பிள்ளை’யின் அசைபடக் காட்சியைக் காண இங்கே சொடுக்குக!
ஜப்பான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மக்கள் இந்த வகை மீனை உணவுக்காக பயன்படுத்துவதும், அரிய வகை மீனினம் என்பதால், இந்த மீனைப் பிடிக்க அந்நாடுகளில் தடை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 07:50 / 13.05.2013] |