காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் அறமார்க்க விழாக்கள் இம்மாதம் 04, 05, 06 தேதிகளிலும், பட்டம் பெற்ற ஹாஃபிழ்களை நகர்வலமாக அவர்களின் இல்லம் சேர்க்கும் நிகழ்ச்சி 07ஆம் தேதியன்றும் நடைபெற்றன.
இம்மாதம் 06ஆம் தேதியன்று நடைபெற்ற ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 11 ஹாஃபிழ் மாணவர்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் - ஹாஃபிழ் மாணவர் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மே 07ஆம் தேதி மாலையில், பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவர்கள் இல்லம் சேர்ப்பு நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், மத்ரஸா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொது நல அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
அந்த வரிசையில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் ஹாஃபிழ் மாணவர்களுக்கான பணப்பரிசுகளை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் வழங்கினார்.
மன்ற அங்கத்தினரான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் உடனிருந்தனர்.
[கூடுதல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன @ 21:33 / 12.05.2013] |