சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 71ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 03.05.2013 வெள்ளிக்கிழமை மாலை ஜித்தா – அஜீசியாவில்உள்ள ஸ்டார் உணவகத்தில் (Star Restaurant) வைத்து நடைப்பெற்றது அதன் விபரங்களைப்பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 71ஆவது செயற்குழு கூட்டம்,
கடந்த03.05.2013 வெள்ளிக்கிழமை மக்ரிபு தொழுகைக்குப்பின் ஜித்தா – அஜீசியாவில் அமைந்துள்ள ஸ்டார் உணவகத்தில் வைத்து நடந்தேறிய அமர்வுக்கு மருத்துவர், எம்.எ.முஹம்மது ஜியாது தலைமையேற்று நடத்தினார். சகோ.ஒய்.எம்.முஹம்மது சாலிஹ் இறைமறையை ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூட்ட தலைவர் நமதூரின் நிகழ்வுகளையும், உலக காயல் நலமன்றங்களின் ஒருமித்த கருத்தோடு உருவாகி விரைவில் உதயமாகும் நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ கூட்டமைப்பான "ஷிபா " அமைப்பின் ஆரம்ப கட்ட பணிகள் சம்பந்தமாக மிக விபரமாக எடுத்துரைத்தார்.தொடர்ந்து சகோ.எம்.எம்.மூசா சாஹிப் வந்திருந்தவர்களை அகமகிழ்வோடு வரவேற்றார்.
கடந்த செயற்குழு அறிக்கை:
கடந்த செயற்குழு கூட்டத்தின் அறிக்கை மற்றும் தீர்மானங்கள் இதுவரை நடந்த மன்ற செயல்பாடுகளையும் சகோ.சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் எடுத்துரைத்தார்.
மன்றசெயல்பாடுகள்:
சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளவர்களை வரவேற்று, அவர்களை அறிமுகம் செய்தும் மேலும் மருத்துவ கூட்டமைப்பான "ஷிபா " வின் தொடக்க நிலை எவ்வாறு உள்ளது, அது மிகவிரைவில் துவங்கப்பட்டு நமதூர் மக்களுக்கு இதன் மூலம் பல நல உதவிகளைசெய்திட நாம் முனைந்திட வேண்டும் என்றும், மன்றம் ஆற்றிய பலசேவைகளையும், செயல்பாடுகளையும் கோடிட்டு காட்டி இன்னும் நம் ஊருக்கு பல சேவைகளை இம்மன்றம் மூலம் நாம் செய்திட ஆவல் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலையும்,கருத்துக்களையும் கூறி நிறைவு செய்தார் சகோ.எம்.ஏ.செய்யது இப்ராஹீம்.
நிதி நிலை:
நிதி நிலை அறிக்கையை சகோ.எம்.எம்.எஸ்.சேகு அப்துல் காதர் கல்விக்கென ஒதுக்கிய பிறகு தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தாக்கள், போன்ற விபரங்களைப்பற்றி எடுத்துரைத்தார்.
எமது மன்ற ஷிபா செயற்குழு உறுப்பினர் விளக்கவுரை:
ஷிபா மருத்துவ கூட்டமைப்பினை துவங்கும் முகமாக உலக காயல் நல மன்றங்களால் ஸ்கைப்பி மூலம் விவாதிக்கப்பட்டு வரும் ஒருங்கிணைப்பு குழுவில் எமது மன்றத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர் சகோ. சீனா, எஸ்.எய்ச். மொஹ்தூம் முஹம்மது. இது சம்பந்தமாக இதுவரை கலந்துரையாடப்பட்ட எல்லாவித தகவல்களை எடுத்து கூறியதுடன், நம் மன்றத்தின் கடந்த 70 ஆவது செயற்குழுவில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற பட்ட தீர்மானத்தின் படி மன்றத்தின் நிலையை எடுத்துரைத்து, அதன் படி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மேலாண்மை திட்டத்தில் சில செயல்பாட்டு திருத்தங்கள் கோரியதாகவும், அது பரிசீலிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டபின் , மன்றத்தின் அங்கீகாரம் பெற்று ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். உறுப்பினர்கள் இதனை மகிழ்வுடன் வரவேற்றனர்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த அனைத்து விண்ணப்பங்களை மருத்துவ குறிப்புகள் மற்றும் ஜமாத் பரிந்துரையின்படி வந்த கடிதம் இவைகளை முறைப்படுத்தி உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு மருத்துவர்,எம்.எ.முஹம்மது ஜியாது அவர்கள் பரிசீலித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மூவருக்கும், இருதய அறுவை சிகிச்சை செய்ய உள்ள ஒருவர்,பலவித நோய்களுக்கான தொடர்சிகிச்சை,கண்புரை சிகிச்சை, டெங்கு காய்ச்சல் என ஐவருக்கும் ஆக மொத்தம் ஒன்பது பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்தும் இவர்களின் பரிபூரண நலத்திற்காக வல்லஅல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களின் உரை:
புனித உம்ரா கடமையை நிறைவு செய்ய வந்துள்ள துபாய் நலமன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோ. துணி உமர் மற்றும் அபூதாபி காயல் நலமன்றதின் துணைத்தலைவர் சகோ.மக்பூல் அஹ்மது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
வாழ்த்துரை வழங்கிய சகோ. துணி உமர் அவர்கள் அனைத்து காயல் நல மன்றங்களின் செயல்பாடுகளையும், சேவைகளையும்,பயனாளிகளுக்கு அளித்து வரும் நலஉதவிகளையும் சுட்டி காட்டியதுடன், நம்முன்னோர்கள் வியாபார நிமித்தமாக வெளியூர்கள் செல்லும் போது சில முக்கியமான ஊர்களில் பாதுகாப்பாக தங்கி தொழில் செய்யும் வகையில் முத்துச்சாவடிகளை அமைத்தும், தேவையுடையவர்களுக்கு தாரளமாக உதவியும் செய்து வந்தார்கள்.அவர்களின் வழியில் நாமும் செயல்படுவதோடு நமக்குள் எந்தவித கருத்து வேற்றுமைகள் ஏற்படாமல் ஒருமித்த கருத்துடன் நாம் அனைவர்களும் நம் மக்களுக்கு தாமாக முன் வந்து தாராளமாக பல நல்லுதவிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்து அந்தவகையில் ஜித்தா காயல் நற்பணி மன்றம் செயல்படுவதை அறிந்தும்,இதோ நேரடியாக கண்டு பெருமிதம் கொள்வதாக கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
சகோ. மக்பூல் அவர்கள் இம் மன்றத்தினரின் துடிப்பான பல நலசேவைகளை மனதார பாராட்டியும்மேலும் நம் ஊர் மக்களுக்கு தேவைகள் அறிந்து பலவித நல்லுதவிகளை செய்வதில் நம் உலக காயல் நல மன்றங்களுக்கு இடையில் நல்ல ஆரோக்கியமான வகையில் போட்டிகள் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அபூதாபி காயல் நலமன்றம் உருவான வரலாற்றையும் சுருக்கமாக கூறி நிறைவு செய்தார்.
சகோ.ஒ.எ.சி.கிஜார் ஸலாஹுதீன் நன்றிநவில, சகோ. எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் பிரார்த்தனை கப்பார உடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் !!
இக்கூட்டத்திற்கான இட ஏற்பாடு மற்றும் சுவைமிகு இரவு உணவும் சகோ.எம்.எம்.மூசா சாஹிபின் அனுசரணையில் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சட்னி,எஸ்.எ.கே.முஹம்மது உமர் ஒலி செய்து இருந்தார்.
தகவல்:
எஸ்.அய்ச்.அப்துல் காதர்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
|