பாரத பிரதமரின் சிறுபான்மை சமுதாயத்திற்கான 15 அம்ச திட்டம் ஜூன் 2006 இல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு அம்சமே Pre - Matric / Post - Matric உதவி தொகை திட்டங்கள். முஸ்லிம், கிருஸ்துவர், பௌத்தர், சீக்கியர் மற்றும் பார்சி ஆகிய தேசிய அளவில் சிறுபான்மை சமுதாய மாணவ, மாணவியருக்கு இவ்வுதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 2007 - 2008 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதாசாரங்கள் அடிப்படையில் இவ்வுதவி தொகைகள் - ஒவ்வொரு மாநிலத்திலும் - வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தினை அமல்படுத்த ஆகும் செலவுகள் முழுவதையும் மத்திய அரசு பொறுப்பேற்கிறது.
Pre - Matric உதவி தொகை திட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மொத்த உதவி தொகைகளில் 30 சதவீதம் மாணவியருக்கு ஒதுக்கப்படுகின்றது. இவ்வுதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் கூடுதலாக இரு மாணவர்கள் மற்றுமே இத்திட்டதின்க்கீழ் பயனடைய முடியும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பித்தவர்களில் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Post - Matric உதவி தொகை திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, வாழ்க்கைத் தொழிற்கல்வி (Vocational Courses), ஐ.டி.ஐ., ஐ.டி.சி., என்.சி.வி.டி., பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு போன்றவைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
2012-13 ஆம் ஆண்டில் புதிதாகவும் (Fresh), புதுப்பிக்கும் முறையிலும் (Renewal) காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வுதவி தொகை பெறும் மாணவர்கள் விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
(1) Pre-Matric புதிது (Fresh) - இங்கு அழுத்தவும்
(2) Post-Matric புதிது (Fresh) - இங்கு அழுத்தவும்
(3) Pre-Matric புதுப்பித்தல் (Renewal) - இங்கு அழுத்தவும்
(4) Post-Matric புதுப்பித்தல் (Renewal) - இங்கு அழுத்தவும்
|