தனியார் ஹஜ் நிறுவனமொன்றின் சார்பில், உம்ரா பயிற்சி மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சி, காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள பிரபு தோட்டத்தில், 07.05.2013 செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில் நடைபெற்றது.
ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹாஜி ஏ.அபுல்ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நகரைச் சேர்ந்த மவ்லவீ ஏ.எஸ்.எம்.முஹம்மத் ஹாரூன் தாவூதி சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, உம்ரா பயிற்சி மற்றும் வழிகாட்டு உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், தனியார் நிறுவனம் மூலம் உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆண், பெண் காயலர்கள் பலரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. உம்ரா பயணியருக்கு பயணப் பைகளும், உம்ரா வழிகாட்டு கையேடுகளும் வழங்கப்பட்டன.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் இரவு 08.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |