சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில், அதன் காயல்பட்டினம் கிளை வளாகத்திற்கருகில் நிறுவப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரம் திறப்பு விழா இன்று (மே 09) மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில், வங்கியின் மதுரை மண்டல துணைப் பொது மேலாளர் சி.பெரியதம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி, ஏ.டி.எம். இயந்திரத்தைத் திறந்து வைத்ததுடன், வங்கி ஏ.டி.எம். அட்டையை இயந்திரத்தில் இட்டு, பணப்பரிமாற்றத்தையும் துவக்கி வைத்தார்.
வங்கி மதுரை மண்டல உதவி துணைப் பொது மேலாளர் பி.ஆர்.விஜயகுமார், வங்கியின் மதுரை அலுவலக தலைமை முலாளர் ஆர்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். வங்கியின் காயல்பட்டினம் கிளை அலுவலக கட்டிட உரிமையாளர் நவாஸ் உட்பட திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் வங்கியின் காயல்பட்டினம் கிளை சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா காயல்பட்டினம் கிளை மேலாளர் டி.புஷ்பராஜ் செய்திருந்தார்.
காயல்பட்டினத்தில், இது 5ஆவது ஏ.டி.எம். இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சார்பில், அவ்வங்கி வளாகத்தில் ஒன்றும், அப்பாபள்ளி தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை முனையில் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அவ்வங்கி வளாகத்தில் ஒரு ஏ.டி.எம். கருவி நிறுவப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில், காயல்பட்டினம் அஞ்சலகம் எதிரில் ஒரு ஏ.டி.எம். கருவி நிறுவப்பட்டுள்ளது.
தகவல்:
ஆசிரியர் M.A.புகாரீ
படங்களில் உதவி:
A.K.இம்ரான் |