காயல்பட்டினம் கடைப்பள்ளி ஜமாஅத் நிர்வாகத்திற்குட்பட்ட பரிமார் தெரு மீன் சந்தை, கதவுகளெதுவுமின்றி, திறந்த நிலையிலேயே இருந்து வந்தது. இதனால், சந்தை செயல்படாத நேரங்களில் நாய் போன்ற விலங்கினங்களுக்கும், சமூகத் தீமைகளில் ஈடுபடுவோருக்கும் இது புகலிடமாக இருந்து வந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு, தற்போது பரிமார் தெரு மீன் சந்தை வளாகத்தில், ஸீ-கஸ்டம்ஸ் சாலைப் பகுதியிலுள்ள வாசல்களில் ஒரு பெரிய இரும்புக் கதவும், சிறிய கதவு ஒன்றும், பரிமார் தெரு சாலைப் பகுதியிலுள்ள வாசலில் இரும்புக் கதவு ஒன்றும், ரூபாய் 30 ஆயிரம் செலவில், பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான பெயிண்டர் மீரான் மேற்பார்வையில் இன்று காலையில் நிறுவப்பட்டது.
|