அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் - நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் விபரங்களைப் பதிவு செய்திட பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்குடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை - MSF காயல்பட்டினம் கிளை சார்பில், வழிகாட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
09ஆவது வார்டு பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காக, இம்மாதம் 25, 26 தேதிகளில், காலை முதல் மாலை வரை, காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் வழிகாட்டு முகாம் நடத்தப்பட்டது.
09ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், அதன் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்களான எச்.எல்.அப்துல் பாஸித், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர தலைவர் எஸ்.எச்.நவ்ஃபல், நகர செயலாளர் என்.எம்.இஜாஸ் அஹ்மத் ஆகியோரும்,
முஹம்மத் ஹஸன் ஸர்ஃபராஸ், செய்யித் அஹ்மத் இர்ஃபான், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக், ரெட் ஸ்டார் சங்க அங்கத்தினரான சாமு ஷிஹாபுத்தீன், செய்யித் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டு, 09ஆவது வார்டுக்குட்பட்ட மரைக்கார் பள்ளித் தெரு, அப்பா பள்ளித் தெரு பொதுமக்களுக்கு பெயர் சரிபார்ப்பு மற்றும் வழிகாட்டுப் பணிகளைச் செய்தனர். |