காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், இம்மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.
14 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நகர்மன்றத் தலைவரின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்து, ஒரு நகர்மன்ற உறுப்பினரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநடப்பு செய்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
1. அப்படி என்ன நகரமன்ற தலைவர் மீது அதிருப்தி...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[29 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28302
நகர்மன்றத் தலைவரின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்து, ஒரு நகர்மன்ற உறுப்பினரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநடப்பு செய்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செய்தி உள்ளதே அப்படி என்ன நகரமன்ற தலைவர் மீது அதிருப்தி...? இந்த அதிருப்தி மக்களின் மீதான நடவடிக்கை விசியமா...? அல்லது இந்த அதிருப்திக்கு உறுப்பினர்களின் மீதான தனிப்பட்ட (சுய விசியம்) சம்பந்த பட்டதா...?
மக்களுக்கு வீடியோ ஆதாரத்துடன் பார்வைக்கு தாருங்கள்...!
4. Re:... posted byVilack SMA (Kayalpatnam)[30 June 2013] IP: 50.*.*.* United States | Comment Reference Number: 28317
வெளிநடப்பு காரணங்கள் ..... உப்புசப்பில்லாதவை .
வெளி நடப்பிற்குபின் , தலைவிக்கும் ஒருசில உறுப்பினர்களுக்கும் நடந்த வார்த்தை போர் ... அநாகரீகமான வார்த்தைகள் .
பதவி ஏற்று சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகியும் , தலைவியின் செயல்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றங்களும் இல்லை . ஒரு professional பதவிக்கு லாயக்கற்றவர் . ஆளும் திறன் பற்றிய புத்தகங்களை இவர் நிறைய படிக்க வேண்டும்.
5. செய்தி என்பது..... posted byகத்தீபு (Doha)[30 June 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28318
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளிருந்து நல்ல பல ஆக்கபூர்வமான பணிகள் பற்றி ஆலோசித்து – தெளிவாகத் திட்டமிட்டு, காயல் சமுதாயத்திற்காக நகர் நல வளர்ச்சிப் பணிகள் செய்தால்தான் செய்தி!
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது போன்ற அன்றாட நிகழ்வுகள் செய்தியாகாது.
விட்டால்..., கடைக்காரர் தமது கடையைக் காலையில் திறந்து இரவில் அடைத்தார் என்றெல்லாம் செய்தி போடுவீர்கள் போல.!
இன்றைய நகர்மன்றம் சாபமில்லை; வரம் தான் என்பதை சம்பந்தப்பட்டோர் எவ்வாறு மக்களுக்குப் புரிய வைப்பார்களோ?
நமது நகர் மன்றத்தை இப்படி ஒழுங்கான முறையில் நடத்த விடாமல் .....ஏன் ?? நமது உறுப்பினர்கள் செயல் படுகிறார்கள் ?? என்று நம் யாவர்களுக்கும் புரியாத புதிராகவே இன்று நாள் வரையில் இருக்கிறது .........
அப்படி என்னதான் நமது நகர்மன்ற தலைவி அவர்கள் மீது நம் உறுப்பினார்கள் வெறுப்பாக உள்ளார்கள் ?? இந்த அம்மா அவர்கள் நமது ஊரின் அதிகமான பொது மக்களின் ....கணிசமான ...வாக்குகள் பெற்று ...நகர் மன்ற தலைவியானதர்கா....அல்லது இந்த அம்மா அவர்கள் நேர்மையாக இந்த நகர்மன்றத்தை நடத்த விரும்புவதாளா.... என்னதான் இவர்கள் நினைக்கிறார்களாம் ......
இப்படியே போனால் நமது நகரமன்றத்தின் நிலைமை தான் என்னவாகுமோ ...என்கிற பயமும் நமக்கு உண்டு
எமது நண்பர் .P.S. ABDUL KADER அவர்கள் குறிப்பிட்டது போன்று தான் கண்டிப்பாக நகர் மன்ற கூட்டம் நடந்து இருக்க முடியும் .......
தயவு செய்து மீதமுள்ள நாட்களையாவது ஒழுங்கான முறையில் நமது நகர் மன்றத்தை நடத்த வழி வகுத்து....நமது ஊருக்கான நல்ல பல திட்டங்களை செயல் படுத்தி ...நம் ஊர் பொது மக்களின் மனதில் உறுப்பினர்களாகிய நீங்கள் பதியக்கூடிய செயலில் ஈடுபடுவது தான் சிறப்பானது.தங்களையே முழுமையாக நம்பி உள்ள .... தங்கள் தொகுதி பொது மக்களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள் .
வெளி நடப்பு செய்யாத அந்த ஒரு நகர் மன்ற உறுப்பினர் அவர்களை யாம் மனதார பாராட்டுகிறோம் ...........இப்படி பட்ட மரியாதைக்குரிய உறுப்பினர் தான் அவர்களின் தொகுதிக்கு பல நல்ல காரியங்களை செய்வார் என்பது உறுதியும் / எதிர்பார்ப்போடும் அம் மக்கள் இருப்பார்கள் ...............
வஸ்ஸலாம்
9. Re:... posted byAbdul Wahid S. (Kayalpattinam)[01 July 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 28346
தலைவியை பதவியிறக்கம் செய்ய எத்தனையோ தந்திரங்கள் மந்திரங்கள் செய்தார்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தந்திரம், மந்திரம் செய்வதற்கான செலவினங்களை ஏற்றுக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருக்கும் வரை இந்த திருவிளையாடல்கள் அப்பப்போ அறங்கேறியே தீரும்.
எசமானுக்கு விசுவாசம் காட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.
ஒட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய இவர்கள் ஏன் நகராட்சிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவருக்கு ஏன் விசுவாசமாக இருக்கிறார்கள் என்று மக்கள் மனதில் ஒரு Million Dollar question எழலாம்.
The answer is very simple.
மக்கள் அடுத்த தேர்தலில் எல்லாவற்றையும் மறந்து விட்டு மீண்டும் தங்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று ஒரு கனவு அவர்கள "நாளைக்கு கிடைக்கவிருக்கும் இரு காசுகளை விட இன்று கிடைக்கும் ஓர் காசு மேல்". என்ற முடிவிற்கு தள்ளியுள்ளது.
நாளைக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் நற்பெயர விட இன்று நிரம்பும் பக்கெட் தன முக்கியம். அதன் வெளிப்பாடுதான் இந்த திருவிளையாடல் (வெளிநடப்பு).
Is it not "A bird in the hand is worth two in the bush" ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross