அண்மித்து வரும் ரமழான் நோன்பு பருவத்தை முன்னிட்டு, ஜூலை 28ஆம் தேதியன்று ஸஹர் - நோன்பு நோற்பு மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை நடத்திட ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால், எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் – ஜக்வா அமைப்பின் பொதுக்குழுகூட்டம், இம்மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், மன்ற துணைத் தலைவர் ஹாஜி அஹ்மத் முஹ்யித்தீன் தலைமையில், ஜனாப் எம்.எஸ்.தாவூத் - ஹாஜி எஸ்.எம்.தாஹிர் இல்லத்தில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஸ்.எம்.ஷெய்கு அலி நுஸ்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர், ஜக்வா செயல்பாடுகள் மற்றும் நகர்நலன் குறித்த - உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ரமழான் ஜகாத் நிதி வசூலிப்பு:
கடந்த ஆண்டுகளைப் போல, இவ்வாண்டும் இன்ஷாஅல்லாஹ் - எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் மன்றத்தின் சார்பில் ஜகாத் நிதி வசூலித்து, அதைப் பெறத் தகுதியான நலிந்தோர் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அதற்கான பொறுப்பாளர்களாக,
1. எம்.எஃப்.மஹ்மூத் ஸுலைமான்
2. ஓ.எல்.ஷெய்கு அப்துல் காதிர்
3. எம்.ஏ.சி.முஹம்மத் அபூபக்கர்
ஆகியோரை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 2 - ஸஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகள்:
வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, கடந்த வருடங்களைப் போல இவ்வாண்டும் - இன்ஷாஅல்லாஹ் ஸஹர் - நோன்பு நோற்பு நிகழ்ச்சியை 28.07.2013 (சனி பின்னேரம்) ஞாயிறு அதிகாலையிலும், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், ஸஹர் - நோன்பு நோற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பாளர்களாக,
1. எஸ்.ஏ.உவைஸ்
2. ஹாஜி பி.லுக்மான் மவ்லானா
3. எச்.எம்.செய்யித் இப்றாஹீம்
4. எம்.எம்.தாவூத்
5. அஜ்மல்
ஆகியோரையும், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பாளர்களாக,
1. எஸ்.எம்.தாஹிர்
2. ஒய்.எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன்
3. எஸ்.ஏ.புகாரீ
4. பி.மீராஸாஹிப்
ஆகியோரையும் இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 3 - அமைப்பை அரசுப்பதிவு செய்திட ஆலோசனை பெறல்:
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் – ஜக்வா என்ற இந்த அமைப்பை அரசுப் பதிவு செய்வது தொடர்பாக, மற்ற அமைப்பினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்திட,
1. எம்.ஏ.எஸ்.அபூதாஹிர் (மன்றத் தலைவர்)
2. எம்.ஏ.செய்யித் முஹம்மத் (மன்றச் செயலாளர்)
3. ‘அன்பின்’ அலாவுத்தீன்
4. எம்.ஐ.கலீலுர்ரஹ்மான்
5. எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ்
6. பி.எம்.கே.ரிஃபாஈ
7. பி.லுக்மான் மவ்லானா
8. ஓ.எல்.ஷெய்கு அப்துல் காதிர்
ஆகியோரைக் குழுவினராக நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - ‘ஷிஃபா’ குறித்து விளக்கம்:
‘ஷிஃபா’ செயல்திட்டத்தின் தற்போதைய நிலை, அது தொடர்பாக இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இதுவரை இணைந்துள்ள மற்ற மன்றங்களுடன் ஆலோசிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, மன்றச் செயலாளர் இக்கூட்டத்தில் அளித்த விளக்கத்தை இக்கூட்டம் அங்கீகரிக்கிறது.
அத்துடன், இறையருளால் ‘ஷி.பா’ அமைப்பு விரைவாக செயல்பாட்டுக்கு வருவதற்கு முழு ஓத்துழைப்பளிக்கவும், அது தொடர்பான மேல் நடவடிக்கைகளைக் கவனிக்க மன்ற தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுமதி அளிப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது..
இவ்வாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் மஷீஷ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, ஜெய்ப்பூர் காயல் நல மன்ற - ஜக்வா அமைப்பின் செயலாளர் செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |