அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் - நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் விபரங்களைப் பதிவு செய்திட, 10ஆவது வார்டு பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்குடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை - MSF காயல்பட்டினம் கிளை மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், வழிகாட்டு முகாம், காயல்பட்டினம் தாயிம்பள்ளி எதிரிலுள்ள மஜ்லிஸுல் கவ்து சங்கம் மற்றும் ழியாஉல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் வளாகத்தில் இம்மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், அதன் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்களான எச்.எல்.அப்துல் பாஸித், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர தலைவர் எஸ்.எச்.நவ்ஃபல், நகர செயலாளர் என்.எம்.இஜாஸ் அஹ்மத் ஆகியோரும், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் அதன் அங்கத்தினரும் வழிகாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
|