ஆறுமுகநேரியில், பணி நிறைவு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய - ஆறுமுகநேரி காவல்துறை சரகத்தில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சண்முகவேலுக்கு, காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. திருச்செந்தூர் காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணபிள்ளை, ஆத்தூர் காவல்துறை ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், ஆறுமுகநேரி பேரூராட்சித் தலைவர் அ.கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் ஆர்.ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்களான மகாராஜன், வின்சென்ட், எஸ்.வெங்கடேஷ், ஆறுமுகநேரி நகர அதிமுக செயலாளர் எஸ்.பொன்ராஜ், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் டி.தாமோதரன், காயல்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஏ.எம்.அப்துல் காதிர், ஆறுமுகநேரி கூட்டுறவு விவசாய சங்கத் தலைவர் ராகவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவில், ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் ராஜகுமாரி நன்றி கூறினார். |