காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி, ஜூன் 27ஆம் நாளன்று நடைபெற்றது.
இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். துளிர் பள்ளி ஆசிரியை ஹலீமுன்னிஸா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். துளிர் பள்ளியின் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஸான், அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி குறித்து அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினத்தைச் சார்ந்த பொதுநல மருத்துவர் ஜாஃபர் ஸாதிக் சிறப்புரையாற்றினார்.
சர்க்கரை நோயின் தன்மைகள், அதன் வகைகள், தடுப்பு முறைகள், நோய் வந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய பேணிக்கைகள் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக அவரது உரை அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், துளிர் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
|