அண்மையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.சண்முகநாதனை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அஇஅதிமுக கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்த சி.த.செல்லப்பாண்டியன் அண்மையில் அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அப்பொறுப்புகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஜூன் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், தூத்துக்குடி மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற - கட்சியின் மாநகர செயல்வீரர்கள் கூட்டத்தின்போது, அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - கூட்ட மேடையில் நேரில் சந்தித்து சால்வையளித்து வாழ்த்து தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினரும், அதிமுக மேலவை பிரதிநிதியுமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கட்சியின் நகர துணைச் செயலாளர் கே.எஸ்.அப்துல் காதிர், 01ஆவது வார்டு செயலாளர் புரட்சி சங்கர், ஆத்தூர் முருகேஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |